பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

தறியேன். இங்கு காள்தோறும் கிலேக் கண்ணுடியின் முன்பு கின்று, தலைமயிரைச் சீவி ஒப்பனை செய்வதிலும், கழுத்துச் சுருக்கை கேர் செய்வதிலும் பத்து கிமிடம் செல வழித்தேன். எனது மயிர் மென்மையானதன்று. அதைச் சீவி ஒழுங்குபடுத்துவதற்கு நாள்தோறும் ஒரு பெரும் போராட்டமே கடத்தவேண்டி யிருந்தது. ஒவ்வொரு முறை தொப்பி வைத்துக் கொள்ளும் போதும், தொப்பியை எடுக்கும் போதும் கை தானகவே தலைமயிரை நாடிற்று. இவ்வாறே நாகரிக மாங்தர் நடுவில் அமர்ந்திருக்கும் போதெல்லாம், கை தானகவே தலைமயிரை அடிக்கடி ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்’ என்று காந்தியடிகள் சத்திய சோதனையில் குறிப்பிடுகின்றார். இதைப் படிக்கும் போது காங்தியடிகள் உடை அணிவதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் எவ்வளவு பேரார்வம் கொண்டிருக் தார் என்று புலப்படும்.

காங்தியடிகள் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்தபோது கூட ஆடை அணிவதில் பெரிதும் அக்கறை காட்டினர். ஆங்கிலேயரைப் போல் பகட்டாக உடையணியா விட்டால், தென்னப்பிரிக்க வெள்ளேயர்கள் தம்மை மதிக்கமாட்டார் கள் என்று கினைத்தார். தென்னப்பிரிக்க இத்தியருக்கு கன்மை புரிய வேண்டும் என்றால் கூட, ஆடம்பரமான மேகாட்டு உடை மிகவும் இன்றியமையாதது என்று கருதினர்.

தம் மனைவியையும், குழந்தைகளையும் தென்னுப்பிரிக் காவிற்கு அழைத்துச் சென்ற போது குசராத்தி வைசிய உடையில் அவர்களே அழைத்துச் செல்வது ஏற்றதல்ல என்று கருதினர். அவ்வாறு சென்றால் தென்னுப்பிரிக்கா வில் யாரும் மதிக்கமாட்டார்கள் என்று கருதினர். தென் னுப்பிரிக்காவில் இந்தியர்களே விடப் பார்சிகளுக்கு அதிக மதிப்பிருந்தது. எனவே கஸ்துாரிபாய்க்குப் பார்சி மாதர் அணியும் புடவையும், குழந்தைகளுக்குப் பார்சிகளைப்