பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று மருத்துவர்கள் கூறினர். எனவே காந்தியடிகளும் அவர் குடும்பமும் மேலும் ஐந்து நாட்கள் கப்பலிலேயே அவதிப்பட கேர்ந்தது. இதற்குள் டர்டனில் காங்தியடிகளுக்கு எதிராக வெள்ளேயரின் கிளர்ச்சி மிகுந்தது. கணக்கற்ற கண்டனக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. கோர்லாண்டு காட்டேரி ஆகிய இரண்டு கப்பல்களையும் எப்படியாவது திருப்பியனுப்பிவிட வேண்டும் என்று பெரு முயற்சி செய்தனர். கப்பல்களின் உரிமையாளரான தாதா அப்துல்லா கம்பெனியாரை மருட்டினர். ஆனல் அவர்கள் அம் மருட்டலுக்கெல்லாம் அஞ்சவில்லை. கப்பலுக்குரிய நஷ்டஈட்டையும் கெடுப்பதாகச் சொன்னர்கள். அதற்கும் அப்துல்லா இணங்கவில்லை.

“மரியாதையாகத் திரும்பிப் போய்விடுங்கள். திரும்பிச் செல்லச் சம்மதித்தால் பயணச் செலவைத் திருப்பிக் கொடுத்துவிடுகிருேம். இல்லேயென்றால் கடலில் தள்ளிக் கொன்றுவிடுவோம்’ என்பன போன்ற அச்சுறுத்தும் கடிதங்கள் காந்தியாருக்கு வந்தன. காந்தியடிகள் அதற்கெல் லாம் அஞ்சவில்லை. -

தென்னப்பிரிக்க இந்தியர்கள் காந்தியடிகள் மேல் இரண்டு குற்றங்களைச் சுமத்தினர்.

1. இந்தியாவிலிருந்த போது காந்தியடிகள் கேடால் வெள்ளைக்காரர்கள் மீது அவதுரருன குற்றங்களைக் கூறிப் பொய்ப் பிரசாரம் செய்தார் என்பது ஒன்று.

2. கோர்லாண்டு, காட்டேரி என்ற இரண்டு கப்பல் கள் நிறைய இந்தியர்களே ஏற்றிக் கொண்டு வந்து கேடாலே இந்தியமயமாக ஆக்கக் காந்தியார் முயற்சிக்கிறார் என்பது மற்றாென்று.

இவ்விரு குற்றச் சாட்டுகளுக்கும் காங்தியடிகளுக்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை. கேடால் வெள்ளேயர்கள்