பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலை மேலே மஞ்சு

107


வார்கள். சில சமயங்களிலே ஆட்டத்தோடு பாட்டும் வரும். பாடிக்கொண்டே அஞ்சாங்கல் ஆடுவார்கள். அப்பொழுது பாடும் பாட்டில் ஒன்றை இப்பொழுது பார்க்கலாம்.

மலைமேலே மஞ்சு
மாரியம்மா குண்டம்
சின்னப்பிள்ளை தண்டம்
சிறுமணிக் கொப்பு
அஞ்சுபிள்ளைத் தாய்ச்சி
கஞ்சிக்கு மடியருள்
சம்பா நெல்லுக் காய்ந்து கிடக்குது
கொட்டிக் கொடம்மா கொட்டிக்கொடு.

ஒடி ஒடித் தொடுகின்ற விளையாட்டு ஒன்றும் உண்டு. ஒரு பாட்டை ஒரே மூச்சில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிக்கொண்டே ஓடி மற்றவர்களில் எத்தனை பேரைத் தொட முடியுமோ அத்தனை பேரையும் தொட வேண்டும். மூச்சை நிறுத்திவிட்டாலோ அல்ல்து மறுபடியும் மூச்சை உள்ளே இழுக்க ஆரம்பித்தாலோ உடனே நின்றுவிட வேண்டும்.

இப்படி ஒரே மூச்சில் தொடும் விளையாட்டின்போது பாடும் பாட்டுக்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மூச்சை நன்முக உள்ளே இழுத்துக்கொண்டு பிறகு பாட்டைத் தொடங்குவார்கள். பாட்டின் கடைசியில் வரும் ஒரு சொல்லையோ சொல் தொடரையோ அந்த மூச்சிருக்கும் வரை திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு மற்றவர்களைத் தொட முயல்வார்கள். பாட்டிலே பொருள் இருக்க வேண்டுமென்பதில்லை.

அத்திப் பட்டை
துத்திப் பட்டை