பக்கம்:காலத்தின் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9


வது பற்றி மேல் அதிகாரிக்கு எழுதி, தொல்லைகள் விளைவித்தார். எழுத்தாளனுக வளர வேண்டும். பத்திரிகை உலகில் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசை என்னே வெறியாகப் பற்றியிருந்ததால், 1941 ஜூனில் என் வேலையை ராஜிநாமா செய்தேன் திருநெல்வேலியில் அரசரடிப் பாலத்தெருவில் குடி புகுந்தோம்.

சிவசு:
பத்திரிகை உலகில் புகுந்த வரலாறு ................

வ.க:
அந்த சந்தர்ப்பத்தில் அண்ணு கோமதிநாயகம் திருநெல்வேலி மெடிகல் ஸ்டோர்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

கல்யாணசுந்தரம் முனிசிபல் பஸ் ஸ்டாண்டில் பில் கலெக்டராகப் பணியாற்றி வந்தார்.

தம்பி முருகேசன் சும்மா இருந்தான். இருந்த வேலையை விட்டுவிட்டு நானும் வீனகை வாழத் துணிந்தது பெரியவர்களின் முனு முணுப்பையும் அம்மாவின் நிரந் தர ஏச்சுக்களையும் பெற்றுத் தந்தது.

நான் படிப்பதிலும் எழுதுவதிலும் மும்முரமாக ஈடுபட் டிருந்தேன். 'கலைமகள் இதழ்களில் அடிக்கடி என் கதை பிரசுரம் பெற்றது எனக்கு உற்சாகம் தந்தது. நவசக்தி கலாமோகினி போன்ற இலக்கிய இதழ் கள் உற்சாகமூட்டின. செட்டிநாடு என்ற ஊரிலிருந்து வந்த இந்திரா - பிறகு காரைக்குடிக்கு வந்ததுநடத்திய சிறுகதைப் போட்டியில் எனது தெருக் கூத்து’ என்ற கதை (கழைக்கூத்தாடியின் அவலப் பிழைப்பு பற்றியது) முதல் பரிசு பெற்றது. 1941 இறுதியில். -