பக்கம்:காலத்தின் குரல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ சு: சிவசு: 43 மரபுக்கவிதை பள்ளம் விழுந்த பாதையிலேயே ஊர்ந்து கொண்டிருக்கிறது. புதுக்கவிதை பாரதியுடன் ஆரம்பித்து, பிச்சமூர்த்தி கு. ப. ரா. காலத்தில் வளர்ச்சி பெற்று, எழுத்து’ காலத்தில் இயக்க வேகம் அடைந்தது, சமூகப்பார் வையும், அரசியல் தத்துவப் பிடிப்பும் கொண்டவர் கள் - வானம்பாடிக் கவிஞர்கள் - புதுக்கவிதைக்கு புதிய வேகமும் வலிமையும் சேர்த்தார்கள் காலப் போக்கில், புதுக்கவிதை வளர்ச்சி குன்றி, குறைபாடு கள் மலிந்ததாகிவிட்டது கவிதைக்கு ஆழம், விசால நோக்கு, சொத்த மனுேபாவம், வாழ்க்கை பற்றிய தனி நோக்கு, கற்பனை நயம், அழகு தேவை என்பதை மறந்துவிட்டு, அரசியல் கோஷங்களையும், நகைச் சுவைத் துணுக்குகளையும், வெறும் சொல்வீச்சுக்களையும் போட்டு ரொப்புகிறவர்கள் பெருத்துவிட்டார்கள். புதுக் கவிதையில் உங்களை ஈர்த்த கவிஞர்கள் பட்டியல் தாருங்களேன். ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா. சி. மணி, வைத்தீஸ்வரன், தி சோ வேணுகோபாலன் நகுலன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, பசுவய்யா (சுந்தரராமசாமி) சிற்பி, அப்துல் ரகுமான், மீரா, மு. மேத்தா, புவியரசு, கங்கைகொண்டான், அக்கினிபுத்திரன். எழுத்து யாருக்காக எழுதப்பட வேண்டும்? வாசகன், சமூகம் பற்றி உள் நினைவு படைப்பாளியை உறுத்திக் கொண்டிருக்க வேண்டுமா?