இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83
1. அடிப்படைத் தேவைகள்
சிறந்த விளையாட்டு வீரராக வருவதற்கு ஆடும் ஆட்டத்திறன்களில் அதிகப் பயிற்சி அவசியம். ஆட்டத் திறன்களில் அதிகமான நளினமும் வலிமையும் பெற வேண்டுமானால், ஆட்டத்திற்குரிய அனைத்து விதிகளையும் கசடறக் கற்று, பழுதறப் பயன்படுத்துவது மிகமிக அவசியமாகும்.
ஆடும் பொழுது அசம்பாவிதங்களும், அநாகரிகச் செயல்களும் ஆட்டக்காரர்களிடையே அடிக்கடி ஏற்படக் காரணம் ஆட்டத்தின் விதிகளை முழுமை