பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 1 11 முழுநீலத் தன்மையுடைய நீலோற்பல மலர் போன்றன; மூத்தாளின் ஆத்தாளுடைய கண்கள் தாமரைப் பூப் போன்றவை: அந்த ஆத்தாளின் ஆத்தாளுடைய கண்களோ இரண்டு அம்புகளைப் போன்றவை. கோட்டானைக் கொடு! தெருவில் நின்ற ஒரு சிறுவனைக் கவிஞர் அன்புடன் பார்க்க, அச்சிறுவனின் தாயாருக்குத்தன் மகன்மீது திருஷ்டி தோஷம் பட்டுவிடப்போகிறதே என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது. ‘உன்னைக் கொடுக்க' என்ற, அவள் கைந் நெறிக்கக் கவிஞர்சினங் கொண்டு இவ்வாறு பாடுகின்றார். என்னைக் கொடுத்தா லிரக்கமுனக் குண்டாமோ வன்னக் கமலமுக வல்லியே-துன்னுமதக் காட்டானைக் கோட்டுமலைக் காரிகையே நீபயந்த கோட்டானைத் தானே கொடு. (174) "அழகிய தாமரை மலரினைப் போன்ற முகத்தினை உடையவளே! மிக்க மதம் பொழியும் காட்டு யானையின் கொம்பினைப் போன்ற தனங்களையுடைய அழகியே! என்னைச் சாகக் கொடுப்பதனால் உனக்கு எத்தகைய இரக்கமும் என்னிடத்தே உண்டாகுமோ? அதனால், நீ பெற்ற கோட்டான் இருக்கிறதே, அதனையே எமனுக்குக் கொடுப்பாயாக, அப்போது தான் உன் செருக்கு அடங்கும்." - 'திருஷ்டி தோஷம் பட்டால் சிறுகுழந்தைகள் நோயுற்று மடிந்துவிடும்’ என்றொரு நம்பிக்கை. அந்தத் திருஷ்டிக்கு உடையவரைக் குறித்து கைநெறித்தால் அந்தத் தோஷம் அவரைத் தாக்கி அழித்து விடும், குழந்தைக்கு ஆபத்தில்லை என்பதும் ஒரு நம்பிக்கை. இவற்றினால் வந்துற்றதே தாயின் கைந்நெறிப்பும் சொல்லும் ஆகும். அவள் பேதைமையைச் சுட்டிக்கவிஞர் பாடிய செய்யுள் இது. கோட்டான் - கோட்டான் போன்ற பிள்ளை எனவும் பால் குடித்துக் கொண்டிருக்கும் பாலன் எனவும் பொருள்படுவதாகும். மாதம் காதவழி ஆயக்காரனான விகடராமன் என்பவன், தன் குதிரையைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டிருந்தான்! அவனையும் அவன் குதிரையையும் ஏளனஞ் செய்து கவிஞர் பாடியது இச் செய்யுள். முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப் பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள-எந்நேரம் வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை மாதம்போம் காத வழி. (175)