பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 117 எல்லாம், ஐயோ! சதவிகரத்தால் (சதியால் - பெண்ணைப் பற்றிய செயலால்) வந்துற்ற வீழ்ச்சியே! துரியோதனாதியர் நூற்றுவரே என்னும், நூற்றொருவர் என்கிறார் கவிஞர். இது குந்தி புத்திரனான கர்ணனையும் சேர்த்துச் சொல்லியது. சத விகரம் என்பது சகரம் எனவும், தகர இகரம் பிரிவுபடும். ஆதலால் சதி என்றனம்! மதியுடைய என்ற சொல், சிறந்த ஆன்றோரைத் துணையாகவுடைய எனவும் பொருள்படும். 'நூற்றுவர்கள் மாண்டதுவும் எனவும் பாடம்; சதி விரகம் - பிறருடைய மனைவிமேற் கொள்ளும் காமம். - புனத்தோடு இரங்கல் தலைவி, இல்லத்தினரால் இற்செறிக்கப்பட்டனள், அதனை அறிந்த தலைவன் புனத்தினை நோக்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது. கம்பத்தா னைக்கடையிற் கட்டினான் கால்சாய அம்பைத்தா வித்தான்கா லானதே-வம்புசெறி இவைகாள் கிள்ளைகள் பூங்குயில்கா ளன்றில்காள் பாவையா ளாண்ட பதி. (186) ‘புதுமைச் செறிவுடைய பூவைகளே! கிளிகளே! அழகிய குயில்கள்! அன்றில்களே! பொற்பாவை போன்ற என் காதலியாள் ஆட்சி செய்துகொண்டிருந்த இந்த இடமானது பத்துத் தலையினையுடைய இராவணனைத் தன் வாலிலே கட்டியவனான வாலியானவன் காலற்றுச் செத்து விழுமாறு அம்பைச் செலுத்தின இராமனின் பாதமாக (அரிதாளாக) ஆகிவிட்டதே? இனி என்ன செய்வேன்?" தினையறுத்த பின்னர் அவள் வரவும் நின்றது; அந்தத் தினைப்புனத்திலே விளங்கிய அரிதாளைக் கண்டு இப்படி நோகின்றான் தலைவன்: அரிதாள் - கதிர் அரியப்பட்ட பின் விளங்குகின்ற தாள். காலற்று - மூச்சற்று. வெறி விலக்கல் ஒரு பெண் காதல் நோயினாலே உடல் மெலிந்தாள். அவள் தாய் தெய்வக் குற்றம் என்று அதனைக் கருதினாள், தெய்வத்துக்கு பலியிட்டுப் போற்றவும் முற்பட்டாள். அப்போது, மகள் தோழியிடத்திற் கூறுகிற பாங்கிலே அமைந்த செய்யுள் இது. முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில் ஒன்றரிந்தா லாகுமோ ஓஓ மடமயிலே அன்றணைந்தான் வாராவிட் டால்! (187)