பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கந்த புராணத்தைக் கச்சியப்ப முனிவர் தமிழ்ச் செய்யுளாற் பாடினார். அதன் பிற்பகுதியாக உபதேச காண்டத்தைப் பாடுமாறு, தம் ஆசிரியராகிய ஆறுமுக சுவாமி ஆணையிட, இவர் அதனை 2600 செய்யுட்களால் பாடினார் என்பர். இந்த ஞானவரோதயரைக் "காளமேகத்திற்கு ஆசிரியர்' என்று, உயர்திரு. மு. இராகவையங்கார் போன்ற ஆராய்ச்சிப் பெரியோர்கள் கருதுவர். இந்தப் பெரியார், ஒரு சமயம் மதுரை நகருக்குச் சென்று வந்தனர். இப்பொழுது, இவரைக் கண்டு தரிசித்த காளமேகப் புலவர், இவருடைய பெருமையை வியந்து கூறிய செய்யுள் இதுவாகும். முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே எதிரொக்கக் கோப்பதற் கேழேழு பேரில்லை இன்றமிழின் பதரைத் தெரிந்தெறி கோவில்லை யேறப் பலகையில்லை மதுரைக்கு நீ சென்ற தெவ்வாறு ஞான வரோதயனே!(209) “ஞான வரோதயப் பெருமானே! முதிர்ந்த சுவையோடு தமிழினிமை புலப்படும் தங்களது பாடல்களை முறையாக அறிந்து, எதிரேயிருந்து கோத்து ஒழுங்கு செய்து வைப்பதற்கு, நாற்பத்தொன்பதின்மராகிய சங்கப் புலவர்களும் இப்போது இல்லை; இனிதான தமிழிடத்தே கலந்து கிடக்கும் பதர்களைத் தெரிந்து கழித்துப் போடுதற்குறிய தலைவனான பிள்ளைப் பாண்டியனும் இப்போது இல்லை; சங்கப் பலகையில் ஏறித் தங்களின் புலமையை நிலைநாட்ட வென்றால், அந்தப் பலகையும் இப்போது இல்லை. இருந்தும், தாங்கள் மதுரைக்குச் சென்றது தான் எதற்காகவோ? அதனைச் சொல்வீர்களாக" என்பது இதன் பொருள். இதனால், ஞானவரோதயரின் ஒப்பற்ற புலமைச் சிறப்பை உளமுவந்து போற்றுகின்றார். விதி விடங்கா! திருவாரூர்த் தியாகேசப் பெருமானுக்கு வீதி விடங்கன் என்பதும் ஒரு திருப்பெயர்.உளியாற் செதுக்கி அமைக்கப் பெறாது, தானே கிளைத்த விடங்கம். பெருமானின் திருமேனி என்பது ஐதிகம். திருவாரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவிஞர், பெருமானின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றனர். சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர் மாலை யழகா மணிமார்பா-வேலை அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி - விடங்கா பிரியா விடை. (210)