பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 5 கவிபாடுதலிலே தமக்குள்ள பேராற்றலைக் கூறி, மன்னனின் பெருமையைச் சொல்லி, புலவர்களின் தவறான போக்கை இடித்துரைத்து, அவர்களை வெற்றிகொண்டு அவமானப்படுத்த வந்திருக்கும் கவி காளமேகம் தானே என்றும் கூறுகிறார் கவிஞர். தூது முதலியவை சிறு பிரபந்த வகையைச் சார்ந்த நூல்கள். நீடு புகழ் - நெடிது பரந்த புகழ் செய்ய செம்மை வாய்ந்த, செங்கோன்மை சிறந்தது, சீறுமாறென்று தாறுமாறுகள் செய்தல். - சீற்றங்கொள்ளல் என்றும், மாறுபட்டு உரைத்தல் என்றும் புலவர்க்கு மாறுபட்ட செயல்களைச் செய்தல், 'குதிரையேறி நடத்துவேன்' என்றது, அவமானப் படச் செய்வேன் என்றதாம். மேகம் புறப்பட்டது இதுவும் மேற்பாட்டினைப் போன்றதே. தம்மைக் கவிஞர் தண்டிகைப் புலவர்கட்கு அறிமுகப்படுத்துகின்றார். கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின்மொண்டு வழியும் பொதிய வரையினிற் கால்வைத்த வன்கவிதை மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப் பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே. (5) கடல் கழியுந்திய உப்பு என்று - கடலானது கழியிடத்தே கொண்டு தள்ளிய உப்பு என்னுமாறு போல, நன்னூற் கடலின் மொண்டு - நல்ல நூற்களாகிய கடலிடத்தே முகந்து கொண்டு, வழியும் பொதியவரையினிற் கால் வைத்து அருவிகள் வழியும் பொதிய மலையிடத்தே காலிட்டுப் பெய்து, வன் கவிதை பொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கி மின்னிப் பொழியும் படிக்கு - வன்மையான போலிக்கவிதைகளைச் சொல்லித் திரிகின்ற புலவர்களின் உள்ளத்தே அடித்தும் முழக்கியும் மின்னலிட்டும் பெய்து நிறைப்பதன் பொருட்டாக, கவிகாளமேகம் புறப்பட்டதே உண்மைக்கவியாகிய காளமேகம் என்பது இப்போது புறப்பட்டிருக்கிறது. கால் வைத்தால் காலிட்டுப் பெய்தல் பொதியத்திலே கால் வைத்த பின் காளமேகமாகி அது எங்கும் மழைபொழியப் புறப்பட்டதென்க. இதனால் பொதியத்தின் சிறப்பும் புலப்படும். காளமேகத்தின் சிறப்பும் புலப்படும். காளமேகம் - கார்மேகம். வன் கவிதை - பொருள் - இனிமையற்ற வறட்டுக் கவிதை, இடித்தல் - இடித்துக் கூறல், முழங்கல் - முழக்கம் செய்தல். மின்னல் - ஒளிபரப்புதல். போலிப் புலவர்களின் வறண்ட உள்ளங்களிலே கவிமழை பொழிந்து வளப்படுத்தக் கார்மேகம் புறப்பட்டது என்கிறார் கவி. இதனால், தம் ஆற்றலையும் அதிமதுரம் முதலியோரின் போலித்தன்மையையும் காட்டினர்.