பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 13 நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் பூமியிடத்தே அடங்காமலும், வந்தாலும் பெருகி வந்த போதிலும், பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாமகுடத்திலே - பெண்ணாகிய, உமாதேவியைத் தம் இடப்பாகத்திலே வைத்துக் கொண்டவராக இருக்கும் தலைவரான சிவபெருமானின் சடாமகுடத்திலே, அடங்கும் அடங்கி நிற்பதாகும். பகீரதனின் தவத்தினாலே பெருகிப்பாய்ந்துவந்த கங்கையின் வேகத்தைத் தம் செஞ்சடை முடியிலே தரித்து அடக்கி, உலகைக் காத்த பரமனின் திருவிளையாடலைக் குறிப்பதாகச் செய்யுள் அமைந்துள்ளது. கொடுத்த சமிக்ஞை வெண்பாவின் ஈற்றடியிலே வந்தது. ஆறுதலை உண்டு 'சிவன், முருகன், பிள்ளையார், திருமால், சிவனடியார் இவர்களுக்குத் தனித்தனியே ஆறுதலை உண்டென்று சொற்சுவை விளங்க ஒரு வெண்பாவில் அமைத்துப்பாடுக” என்றார் ஒரு புலவர். சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை ஐங்கரற்கு மாறுதலை யானதோ-சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார். (16) சங்கரற்கும் ஆறுதலை - சிவபெருமானுக்குத் தலையிலே கங்கையென்னும் ஆறு உரியதாகும், சண்முற்கும் ஆறுதலை முருகப்பெருமானுக்கும் ஆறு தலைகள் உளவாகும், ஐங்கரற்கு மாறுதலை - ஐங்கரனாகிய பிள்ளையாருக்கு உடலோடு மாறுகொண்ட யானைத் தலையாய விளங்கும், சங்கைப் பிடித் தோர்க்கும் ஆறுதலை - சங்கத்தை ஏந்தியவரான திருமாலுக்கும் பிரளய வெள்ளம் உறைவிடமாயிருக்கும், பித்தா - பித்தனாகிய பரமனே! நின் பாதம் படித்தோர்க்கும் ஆறுதலை பார் - நின் திருவடிகளைப் போற்றியவரான என்போலும் சிவனடியார்க்கும் ஆறுதல் உண்டாகியிருக்கின்றது. இதனைக் காண்பாயாக! சிவபெருமானின் கருணை தனக்கு இருப்பதனால் தம்மை அவர்களால் வெற்றிக்கொள்ள இயலாது எனவும் குறிப்பாக எச்சரிக்கின்றனர். சிவனுக்கு அரைக்கண் முக்கண்ணன் சிவபெருமான், அவனுக்கு அரைக்கண்தான் உள்ளது என்று பாடுக என்று சொன்னார் ஒருவர்.