பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் இறுதியாகித் தலைகீழாக நேம், நூல், நீர், நாண் என்றாற்போல ஆகியவருமானால் தெரிவை இடத்து அமர்ந்தான் - உமாதேவி யானவள் தன் இடப்பக்கமாக வீற்றிருக்க விரும்பியவனாகிய பெருமானின் அரையில் முடியில் அணிமார்பில் நெஞ்சில் புரை அறச் சேர்வை ஆம் அரையிலும் முடியிலும் அழகிய திருமார் பிலும் நெஞ்சிலும் குற்றமறச் சேர்க்கப்படுவதற்கு உரியனவாகும். நேம் விஷமும் ஆம்; அப்பொழுது நெஞ்சு என்றதைக் 'கண்டம்' எனப் பொருள் கொள்வர். நே எனில், அன்பு: அது நேம் என மருவியும் வரும்; அப்பொழுது அவன் நெஞ்சிலே உயிர்களிடத்து அன்புடையவன் என்க. அரையில் நாணும், முடியில் நீரும், மார்பில் நூலும் நெஞ்சில் அன்பும் உடையவன் மாதொரு பாகன் என்பது இச்செய்யுளின் பொருள். சோ கா மா ஏ வா தா ஒருவர், 'சோ கா மா ஏ வா தா என்ற சொற்களால் தொடங்கும் ஒரு வெண்பாவினைப் பொருட் சிறப்புடன் கூறுக’ என்றவுடன், கவிஞர் பாடின பாடல் இது. சிவ பெருமானைப் போற்றி அவர் தம் திருவிளையாடல்களைக் குறிப்பிட்டுப் பாடுகிறார். - - சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை பாகார்ந்த தில்லைப் பரமேசர்-வாகாய்த் தரித்தார் எரித்தார் தறித்தார் உதைத்தார் எரித்தார் கணைபடைத்தார் ஊர்க்கு. (21) உமைபாகு ஆர்ந்த தில்லைப் பரமேசர் - உமாதேவியைத் தம் இடப்பாகத்திற் கொண்டவரான தில்லையிற் கோயில் கொண்டிருக்கும் பரமேசுவரன் ஆனவர், சோகாமா ஏவாதா சொல்லின் மனைக் கூட்டி - சோ காமா ஏ வா தா என்பவற்றின் இறுதியில் மன் என்பதனைக் கூட்டிச் சொன்னால், வாகாய்த் தரித்தார் - அழகாய்த் தரித்தார் (சோமன் - சந்திரன்), எரித்தார் எரியச் செய்தார் (காமன்); தறித்தார் - கொன்றார் (மாமன், தக்கன்); உதைத்தார் - உதைத்தனர் (ஏமன்); உரித்தார் - தோலினை உரித்தார். (வாமன் - யானை) ஊர்க்குக் கணை படைத்தார் . முப் புரங்களை அழித்தற் பொருட்டுக் கணையாக அமைத்துக் கொண்டார் (தாமன் - திருமால்) என்று அறிக. கொட்டைப் பாக்கு! 'கொட்டைப் பாக்கு என்று தொடங்கி, களிப்பாக்கு என்று முடியும் படியாகப் பொருட் செறிவுடன் வெண்பா ஒன்று கூறுக’ என்றார் ஒருவர்.