பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பற்றிப் பேசும் இயல்புடைய மன்னவனே! வரத்தில் வருசாமிநாதா கேள் வருகிற போக்கிலே வந்து இந்தச் சபையில் அமர்ந்துவிட்ட சாமிநாதனே! கேட்பீராக: மால் திருமாலானவன், பொன் தோய்ந்தான் திருமகளோடு கலந்து இன்புற்றான்; ஆமேய்ந்தான்-பசுமந்தைகளை மேய்த்தான்; தான் வரை குடையாத் தூக்கினான் - தான் கோவர்த்தனம் என்னும் மலையினையே குடையாகத் தூக்கிப் பிடித்தான்; இலை மேன் மேல் ஆச் சாய்ந்தான் - ஆலிலையின் மேலாகத் தன் உடல் கொண்டு படுத்தான்; காய் எறிந்தான் - விளங்காயை எறிந்தான்; பின் பூ சாப்பிட்டான் - பின்னர் நிலவுலகையும் விழுங்கினான்' என்று அறிவீராக. மும்மூர்த்திகள் 'மும்மூர்த்திகளாகிய சிவன், விட்டுணு, பிரமன் ஆகியவர்களின் பெயர்கள் அமைந்திருக்க வேண்டும். அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்தும் ஆயுதம், பூணும் அணிகள், ஏறும் ஊர்திகள் வசிக்கும் இடங்கள் இவை எல்லாம் வரவேண்டும். ஒரு வெண்பாவை இத்தகைய முறையிலே உம்மாற் பாட முடியுமோ? என்றனர் புலவர் ஒருவர். சிறுவ னளைபயறு செந்நெற் கடுகுயூ மறிதிகிரி தண்டு மணி நூல்-பொறியவரம் வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக் கற்றாழம் பூவே கறி. (36) என்று காளமேகம் அதற்கு இசையப் பாடினார். புலவர் அயர்ந்து போனார். வேதன் அரன் மாலுக்கு - பிரமன் சிவன் திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு கறி பயறு சிறுவன் அளை பயறும் பிள்ளையும் வெண்ணெயுமே கறிகளாம்; செந்நெல் கடுகுபூ செந்நெல் விஷம் பூமி மூன்றுமே உணவுகளாம்; தண்டுமறி திகிரி - தண்டம் மான்மறி சக்கரம் இவையே ஆயுதங்களாம்; நூல் பொறி யரவம் மணி - முப்புரிநூல் புள்ளிகளையுடைய பாம்பு கெளத்துவமணி இவையே அணிகளாம்; வெற்றேறுபுள் அன்னம் - அன்னம், வெள்ளை ஆன் ஏறு, கருடப்புள் ஆகியவையே வாகனங்களாம்; கல் தாழம் பூ - தாமரை மலரும், கைலைமலையும் பாற்கடலும் ஆகிய மூன்றுமே வாழும் இடங்களாம். இவ்வாறு சொற்களைக் கூட்டிப் பொருள் உரைக்கவும். எழுத்தாணி சூரிக்கத்தி ‘எழுத்தாணி என்று எடுத்துச் சூரிக்கத்தி என்று முடித்து ஒரு செய்யுளைச் சொல்லுக' என்றார் ஒருவர். மிகவும் நயமுடனே பாடி அவரை மெய்மறக்கச் செய்தார் கவிஞர்.