பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பருத்த கட்டைகளை ஏந்தியவாறு அது வந்து கொண்டிருக்கும்; கொத்து இருக்கும் - மத்தகத்திலே பாகர்கள் அங்குசத்தாற் கொத்திய வடுக்கள் இருக்கும்; நேரே குலைசாய்க்கும் - நேராக மலையிடத்துள்ள வாழைக்குலையினைச் சாய்த்து உண்ணு தலையும் அது செய்யும். வைக்கோலுக்கும் யானைக்கும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும்-சீருற்ற செக்கோல மேனித் திருமலை ராயன்வரையில் வைக்கோலு மால்யானை யாம். (49) சீர் உற்ற செக்கோல மேனித் திருமலைராயன் வரையில் சிறப்புப் பொருந்திய செந்நிறமான திருமேனியினையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே, வைக்கோலும் மால் யானை யாம் - வைக்கோலும் மதயானைக்குச் சமமாம், எவ்வாறு எனில். வைக்கோல்: வாரிக் களத்து அடிக்கும் அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டிலே அடிக்கப் படும்; வந்து பின்பு கோட்டை புகும் - அதன் பின்பு கோட்டைக் குள்ளே வந்து சேரும்; போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோற் போர்களாகச் சிறப்புற்று அழகாகவும் விளங்கும். மதயானை: வாரிக்களத்து அடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரிப் போர்க்களத்தே தரையில் அடித்துக் கொல்லும்; பின்பு வந்து கோட்டைபுகும் . அதன்பின்பு பகையரசின் கோட்டைகளைத் தகர்த்து உள்ளே செல்லும்; போரிற் சிறந்து பொலிவாகும் . இவ்வாறாகப் போர்த்துறையிலே சிறந்து மேன்மையுடையதாக விளங்கும். பாம்புக்கும் வாழைப்பழத்திற்கும் நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது-விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைராயன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம். (50) விஞ்சு மலர்த்தேம் பாயும் சோலைத் திருமலைராயன் வரையில் மிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண் டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச் சாரலிலே, பாம்பாகும் வாழைப் பழம் - வாழைப் பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும். எங்ங்னமெனில், பாம்பு: நஞ்சு இருக்கும் . நஞ்சினைக் கொண்டதாயிருக்கும்; நாதர் முடி மேலிருக்கும்-தலைவராகிய சிவபெருமானின் திருமுடி