பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 55 பொருட்டாக விளங்கும் தன் தோள் ஆற்றலினாலே வளைத்து ஒடித்தவன், கனைகடல் நடவைக்காக வானரங்களால் அடைத்த - முழங்கும்கடலைக் கடந்து செல்வதற்காகக் குரங்குகளினாலே அடைக்கச் செய்தவன்; மோகூரானே - அவனே மோகூரிலே வீற்றிருக்கும் திருமால் ஆவான். மாடு - பறை 'கடைமொழிமாற்று' என்பது செய்யுள் அணிகளுள் ஒன்று. செய்யுளின் ஈற்றுச் சொல்லை முதலிற் கொண்டு பொருள் கொள்ளல் வேண்டும். அப்படிக் கொள்ளாமல் நேரடியாகக் கொண்டால் பொருள் வேடிக்கையாகவும் பொருத்தமின்றியும் போய்விடும். அடுத்து வரும் நான்கும் அத்தகைய செய்யுட்கள். மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன் கூடிமிக மண்பிசைவான் கொல்லனே-தேடி இரும்படிப்பான் செக்கான் எண்ணெய் விற்பான் வண்ணான் பரும்புடவை தப்பும் பறை. (83) பறை மாடு தின்பான்; பார்ப்பான் மறை ஒதுவான்; குயவன் கூடிமிக மண்பிசைவான்; கொல்லனே தேடி இரும்பு அடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான் பரும்புடவை தப்பும்; இவ்வாறு கூட்டிப் பொருள் காண்க கூடி மிக மண் பிசைதல் - மண் ஒன்று சேர்ந்து தன் தரத்தில் மிகுமாறு பிசைதல் தேடி இரும்பு அடித்தல் - தக்கபதம் வருவதை ஆராய்ந்து மென்மேலும் இரும்பைக் காய்ச்சி அடித்தல், செக்கான் - எண்ணெய் வாணியன், செக்கிலே தொழில் செய்வோன். பரும் புடவை - பெரிதான புடைவை. ஆயனுக்கு மண் கடைமொழிமாற்றுச் செய்யுள் இதுவும். ஆயன்’ என்றதனை முதலடியின் இறுதியிலே வைத்துப் பொருள் செய்தல் வேண்டும். ஆயனுக்குக் கண்மூன்றாம் ஆதிசிவ னுக்கிருகண் மாயனுக்குச் செங்கையிலே மான்மழுவாம்-நேயமுடன் சங்கரர்க்குச் சங்காழி தான்மாலுக் காலமாம் மங்கையிடத் தாற்காகு மண். (84) 'கண் மூன்றாம் ஆதி சிவனுக்கு இரு கண் ஆயனுக்கு; செங்கையிலே மான் மழுவாம் நேயமுடன் சங்கரற்கு சங்கு ஆழி தான் மாலுக்கு ஆலமாம் மங்கை இடத்தாற்கு ஆயனுக்கு ஆகும் மண்” என்று கூட்டிப்பொருள் கொள்ளல் வேண்டும்.