பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 57 இதுவும் மேற்கண்டபடி கடைமொழி மாற்றுவகையைச் சார்ந்ததுதான். ஆனால் கடைசி அடியிலே வரும் இறுதி இரு சீர்களை மட்டும் முதலில் வைத்துப்பொருள் செய்ய வேண்டும். ஆறிரண்டு கை கடம்பற்கு கடப்பமாலை உடையனான முருகப்பெருமானுக்குப் பன்னிரண்டு கைகள். எண்தோள் அயற்கு - பிரமாவுக்கு எட்டுத் தோள்கள். கண் பதினைந்தாம் ஆல் கடம்பர்க்கு - கடம்ப வனத்து வீற்றிருக்கும் சிவபெருமானுக்குப் (ஐந்து முகங்கள் ஆனதால்) பதினைந்து கண்களாம். நால் வாய்கை ஐந்தே கடம்பற்கோ ஆனை முகற்கு தொங்கும் வாயும் ஐந்து கைகளும் மதமும் பல்லாகிய கோடும் ஆனைமுகக் கடவுளுக்கு உள்ளனவாம். ஆயிரம் கண் அகண்டலர்க்கு - இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்; இலம்பாடு ஆன் ஐம் மகற்கு ஐந்து முகமுடைய சிவனுக்கு வறுமையும் ஆனேறும் உரிமை உடையனவாம். 'கடம்பற்கு என்னுஞ் சொல், மும்முறை வந்தும் பொருளால் வேறாயின்மை காண்க. சிதம்பர சின்னங்கள் சிதம்பரம், நடராசர் கோயிலிலே இருக்கின்ற சின்னங்கள் பலவற்றையும் தொகுத்து வெண்பாவாகப் பாடியது இது. ஞான சபைக னகசபைசிற் றம்பலம்பே ரானந்தக் கூடந் திருமூலட்-டானம்பே ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபுரம் பொற்செய் கம்பமண்ட பஞ்சிவகங் கை. (87) சிற்சபை ஞானசபை என்பது கனகசபையாவது பொன்னம் பலம்; பெருமான் நடராச மூர்தியாக வீற்றிருக்கும் இடம் அது; சிற்றம்பலம் என்பது சிற்சபையான ஞான சபைக்கு முன்னர் இருப்பது, பேரின்ப சபை பேரானந்தக் கூடம் எனப் பெறுவது; இது பெருமான் ஊர்த்துவதாண்டவ மூர்த்தியாக விளங்கும் இடம். திரு மூலட்டானம் என்பது பெருமான் சிவலிங்க சொரூபமாக விளங்கும் இடம். பேரம்பலம் என்பது தேவசபை: தேவர்கள் வந்து பெருமானைத் தரிசித்துப் போற்றும் இடம் ஐந்து பிரகாரங்கள் பஞ்சாவரணம் என்று குறிக்கப் பெற்றன. நான்கு திசைக் கண்ணும் விளங்கும், கோபுரங்கள் நாற்கோபுரங்கள் என்று குறிக்கப் பெற்றன. கம்ப மண்டபம், ஆயிரக்கால் மண்டபம். சிவகங்கை - திருக்குளத் தீர்த்தம். திருவாரூர்ச் சின்னங்கள் . - திருவாரூர்ப் பெரிய கோயிலின் முக்கியமான சின்னங்களை குறிக்கும் செய்யுள் இது,