பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் தில்லைக்கூத்தனைக் தரிசிக்கச் சென்றிருந்தார். கூத்தப் பெருமானின் முன் நின்றவராக அவனைப் போற்றியபடியும் நின்றார். அப்போது, பெருமான் கையிலிருக்கும் மான்மறி முகத்தையும் முன்னங்கால்களையும் மேலே தூக்கியவாறு நிற்பதன் காரணம் யாதோ?’ என்று சிலர் கேட்கக் கவிஞர் இப்படிக் கூறுகிறார். பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும் தன்னெஞ் சுவகையுறத் தாவுமே- அன்னங்கள் செய்க்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன் கைக்கமலத் துற்றமான் கன்று. (94) "அன்னப் பறவைகள் வயல்களிடத்தேயுள்ள தாமரை மலர்களிடத்தே உலவிக் கொண்டிருக்கின்ற வளத்தினையுடைய சிதம்பரத்து நடராஜப் பெருமானின் கையாகிய கமலத்தே பொருந்தியிருக்கின்ற மான் கன்றானது, பொன்னிறத்துச் சடா முடியிலே அன்பர்கள் சார்த்தியிருக்கும் அறுகம் புல்லிடத்தும் கங்கையின் சிறந்த நீரிடத்தும் தன் நெஞ்சமானது விருப்பங் கொள்ள, அவற்றை அடைதலை விரும்பி அப்படித் தாவிக் கொண்டிருக்கிறது." - மானின் நிலைக்கு விளக்கம் கேட்க முனைந்தவர்கட்கு வேடிக்கையாக விளக்கங்கூறி அவர்களைக் களிக்கச் செய்கிறார் கவிஞர். ஆட்டுக்கு இசைந்தவர் சிதம்பரத்திலே, கோவிந்தராயரின் சந்நிதியும் இருக்கிறது. சிலர், சபாநாதர் நடனமிடும் இடம் நோக்கிக் கோவிந்தராயர் கால் நீட்டிப் பள்ளிகொண்டிருப்பதனைக் காட்டிக் குறும்பாகப் பேசினர். அதனைக் கேட்டுக் காளமேகம் பாடியது இது. அப்படிப் பேசியவர்கள் வெட்கித் தலைகுனியுமாறு திருமாலைக் கேலிப் பேசுகிறார் கவிஞர். ஆட்டுக் கிசைந்தவ ரம்பலவாண ரவர்க்கெதிரே நீட்டிற்று மால்வட பாலினிற் காலென நீநினையேல் சூட்டுற்ற முப்புறஞ் செற்றவர் தம்மைச் சுமந்தலுத்த மாட்டுக்கென் னோவிடங் கானிட்டல் சொல்ல வழக்கில்லையே. (95) "ஆடலுக்குப் பொருத்தமானவர் அம்பலவாணர்தாம். அவருக்கு எதிரே வடதிசையிலே திருமால் தம் காலைநீட்டி யுள்ளனரே?” என்று நீ தவறாக எதுவுமே நினையாதே. தீப்பற்றி யழிந்த திரிபுரக் கோட்டைகளை அப்படி அழியச் செற்றவரான சிவபிரானைச் சுமந்து சுமந்து அலுத்துப் போன மாடாகிய அத்