பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறிச் சார்பும் இல்லையாயின் தவறாகப் பயன்படுத்தலாம். உரிய வேலை நேரத்தில் பணிகளைச் செய்து முடிக்காமல் தாமதித்துக் கூடுதல் நேர ஊதியம் பெறத் தக்க வகையில் செய்யலாம் அல்லவா? இங்ங்னம் நிகழாது என்று யார் கூற முடியும்? அதோடு பணிகள் கூடுதலாக இருந்து தேக்கமடையுமானால் வேலை பார்த்த அலுவலரையும் கூடுதலாக வேலை வாங்குவது அந்த அலுவலருடைய உடல் நலத்தைப் பாதிக்கும்; குடும்ப மகிழ்வைக் குறைக்கும். தேவையான ஓய்வின்றித் தொடர்ந்து பணி செய்யும். திறன், காலப் போக்கில் சோர்வுபடும். இதனால் கூடுதல் பணி நேரத்தைத் தவிர்ப்பது அலுவலர்களுக்குக்கூட நல்லது. மேலும் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கிறது. கூடுதல் நேர வேலை வாய்ப்பின் மூலம் புதியவர்களுக்குரிய வேலை வாய்ப்பு குறையும். ஆதலால் கூடுதல் நேரவேலை தவிர்க்கப்பட வேண்டியதே.

இப்படிப் பல்வேறு துறைகளில் மாதந்தோறும் முறையான உத்தரவாதமான ஊதியம் பெறுகின்றவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று வருகின்றனர். அதுமட்டுமா? இந்த ஊதியக் கொள்கையிலும் ஒரே மாதிரி அடிப்படையில்லை. நூறாயிரம் வேற்றுமைகள்! ஏற்றத் தாழ்வுகள், இந்த ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தொடர்ந்து நாட்டில் போராட்டங்கள்! வேலை செய்யா நாள்களில் பணிப் பாதிப்பு உற்பத்தி முடக்கம். ஏன்? இந்தியா ஒரு நாடல்லவா? இந்திய நாட்டின் அரசு அலுவலர்களிடையே ஊதிய ஒருமைப்பாடு இருத்தல் கூடாதா? எல்லாருக்கும் எல்லா இடத்திலும் ஒரே ஊதியம் சாத்தியமா? நியாயமான கேள்வி. அடிப்படை ஊதியம் ஒரே மாதிரியாக இருக்கலாம், இருக்க வேண்டும். சில சிறப்பூதியங்கள் படிகள் வழங்கலாம். தொழில் திறன், பணி செய்யும் நிறுவன அமைப்பு, சீதோஷ்ண நிலை, வாழும் ஊர் ஆகிய அடிப்படையில் சிறப்பூதியங்கள் வழங்கலாம். இந்தியாவில் ஊதியக் கொள்கையில் சீரான விதிமுறைகள் காணாத