பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைந்து, வாழ்வோருடனேயே கூடிக் குலாவுவதும் இத்தீய சக்திகளே! இத்தீயசக்திகளைப் பொது மக்களுக்கு இனம்காட்டித் தனிமைப்படுத்த வேண்டியது உடனடியாகச் செய்ய வேண்டிய நாட்டுப் பணி! மக்கட் பணி! சமயப் பணி!

இத்தொண்டினைச் செய்வதற்குப் பயன்படும் ஓர் அமைப்பு திருவருள் பேரவை! திருவருள் பேரவை ஓர் இயக்கம். உலகிற்கு ஒரு கடவுள் உண்டு. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. அந்தக் கடவுளுக்கு உருவம் உண்டு-உருவம் இல்லை-இப்படிப் பலப்பல கோட்பாடுகள். மேலும், மொழிகள் தோறும் கடவுளின் பெயர்கள் மாறும்; நாடுகள்தோறும் அனுபவங்களுக்கு ஏற்ப திருக்கோலங்கள் மாறும் அல்லது ஊரும் பெயரும் இல்லாமலும் போகலாம். கடவுள் எல்லையற்ற ஆற்றலுடையவன்; அளவற்ற அருளாளன். இந்தக் கருத்தில் முரண் இல்லை. எல்லாம் வல்ல இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வணங்கி இன்புற்று வாழ மனித உலகத்திற்குத் திருவருள் பேரவை வழிகாட்டும்; வழிநடத்தும்.

சமயங்கள் அனைத்திலும் ஒரே கடவுள் தான் நின்றருள் செய்கின்றான். சமய வேறுபாடுகள் இறைவன் அருளிய வகையாலும் நாட்டமைப்பாலும் காலத்தின் வேறுபட்டாலும் அனுபவ வாயில்களாலும் ஏற்பட்டனவேயாம். இந்த வேற்றுமைகள் ஆக்கந்தருவன; உயர்வைத் தருவன என்பதைக் கவனத்திற் கொள்வது நல்லது. இந்திய நாட்டில் விளங்கும் ஒவ்வொரு சமயமும் தத்தம் தனித்தன்மையை இழக்காமல் வளரவும், மன்பதைக்குத் தொண்டு செய்யவும் திருவருள் பேரவை துணை நிற்கும்; அரண் செய்யும்; எக் காரணத்தை முன்னிட்டும் சமய வெறுப்பையும் பகையையும் உண்டாக்க எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் தடுத்து நிறுத்தும். இத்துறையில் தேவையெனில் அறவழிப் போராட்டங்களையும் நிகழ்த்தும். நாடு முழுவதும் திருவருள் பேரவை அமையுமானால் மதவெறி-மதக் கலவரங்கள்