பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

195



37. [1]உலகத் தலைவர் பெரியார்

சேலம் நகராட்சி மன்றத்தினர், தலைவர் பெரியார் அவர்கள் படத்தை, நம்மைத் திறந்து வைக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சி பலருக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும். தமிழர்களில் பலருக்கு இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியைத் தரும் என்பது உறுதி. தமிழ்ச் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டில்-வளர்ச்சியில் இது ஒரு படி என்றே நாம் கருதுகிறோம். நயத்தக்க நாகரிகப் பண்பாடு நாட்டில் மலர, இது போன்ற நிகழ்ச்சிகள் துணைசெய்யும். (கருத்து வேற்றுமைகள், காழ்ப்பாக உருப்பெற்று, வளர இடம் கொடுப்பது, தீயதிலும் தீது, வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை கண்டு, கலந்து பழகுதலே தலைசிறந்த மனிதத் தன்மையாகும்)

வேற்றுமையில் ஒற்றுமை

நாம், தலைவர் பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், பல துறைகளில் கருத்தொருமைப்பாடுடையவர்களாகவும், சில துறைகளில் வேறுபாடு உடையவர்களாகவும் இருக்கிறோம். தமிழர் சமுதாயத்தைப் பொறுத்த கொள்கையளவில் உடன்பாடும், சமயநெறியைப் பொறுத்தவரையில் உடன்பாடின்மையும் உடையோம்.

தந்தை பெரியார்

தலைவர் பெரியார் அவர்கள் இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்தையாக விளங்குகிறார். ஆயிரம் ஆயிரம் தமிழர்கள், தமிழிளைஞர்கள் “தந்தை பெரியார்” என்று பெருமையோடு பேசி மகிழ்கின்றனர். சமுதாயத் தந்தையாக விளங்குதற்குரிய தெளிவான அறிவு - அனுபவம் - உழைப்பு அணைக்கும் தன்மை - இன நலத்திற்காகப் போராடும்


  1. தனி வெளியீடு