பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

209


விளக்க உரை செய்ய முன்வந்தார். திருப்புத்தூர்த் திருக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுறை விழாவில் “அப்பரடிகள் கண்ட சமுதாயம்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய விரிவுரை இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பரடிகள் மீது பல ஆண்டுகளாகப் பக்தி கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள்கூட அப்பரடிகளை அந்த அளவிற்கு ஆவேசத்துடன் பாராட்டியிருக்கமாட்டார்கள். அந்தக் கூட்டத்தில் அவர் ஒடுக்கமாக சைவ மடங்களின் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த காட்சி கண்களில் நீர்க்கக்கச்செய்தது. சமுதாய வாழ்வோடு இரண்டறக் கலந்த-ஒப்பற்ற சமுதாய இலக்கியமாகக் கருதப் பெறுகின்ற அப்பரடிகளில் திருமுறை இலக்கியத்தை இப்பரந்த உலகின் எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

குன்றக்குடியில் நமது உயர்நிலைப்பள்ளியின் சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில் நண்பர் ஜீவா அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அதுபோழ்து, பாரதி கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைவிட, தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்குமே முதன்மை கொடுக்கின்றான் என்று விளக்கிப் பேசினார். அவருக்குப் பின் பேசிய நான், பாரதி தன்னம்பிக்கையையும் முயற்சியையும் மட்டும் வலியுறுத்தினார் என்று எடுத்துக் காட்டினேன்.

நண்பர் ஜீவா அவர்கள் இந்த என்னுடைய பேச்சில் தம்முடைய கருத்து முரண்படுவதாகக் கருதினார்கள். கூட்டம் முடிந்த பிறகும், இரண்டுமணி நேரத்திற்கு மேல் என்னுடன் விவாதித்தார்கள், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டோம். அன்பர்கள் காரைக் குடி கி.நா. கிருஷ்ணன், மேலமாகாணம் எஸ். நாராயணன், தேவகோட்டை கே.எம். சுப்பையா ஆகியோரே உடனிருந்தார்கள். ஆனாலும் விவாதம் உரத்த குரலில் இருந்தது. சூடுடையதாக இருந்தது. விவாதம் முடியவில்லை. காலம்