பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

223


'தமிழுக்கும் அமுதென்று பேர்!-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்குநேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்!-இன்பத்
தமிழ்எங்கள் சமுகத்தின் விளைவுக்குநீர்!”

என்று பாடினான்.

இந்திய நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் நிலவும் சாதி வேற்றுமை கொடுமைத் தன்மையுடையது. இந்தச் சாதி வேற்றுமையை ஒழிக்க நாம் தொடர்ந்து போராடினாலும் நம்மால் முடியாமல் தோல்வியே அடைந்துள்ளோம். இன்றைய நிலையில் சாதிமுறை, சாதி வேற்றுமை ஒழிக்கப் படக் கூடியவைதானா? என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு விடை நம்முடைய நாடாளும் அமைச்சர்கள்தான் சொல்ல வேண்டும். சாதி வேற்றுமையை ஒழிக்கும் பணியில் நாம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியே கண்டாலும் சரி அந்த வகையில் தொடர்ந்து முயற்சி செய்வது நம் ஒவ்வொருவருடைய கடமை. . -

வேறு எங்கு சாதி வேற்றுமை நிலவினாலும் சமுதா யத்தின் ப்ொது ஒருமைப்பாட்டு நிறுவனமாக விளங்கும் திருக்கோயிலில் பிறப்பின் காரணமாக அமைந்துள்ள சாதி வேற்றுமை நிலவுதல் கூடாது. பாவேந்தன் திருக்கோயிலில் நிலவும் சாதி வேற்றுமையை சாதுரியமாகச் சந்திக்கின்றான். "திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் கடவுள் ஆற்ற லுடையவன். அந்தக் கடவுளைப் பறையர் குலத்து அமாவாசை தீண்டுகின்றான். அமாவாசை தீண்டுவதனால் கடவுளின் ஆற்றல் குறைந்து விடுகின்றதென்றால் யாருடைய ஆற்றல் பெரிது? கடவுளின் ஆற்றலா! அமாவாசையின் ஆற்றலா?-இது பாவேந்தன் கேள்வி. பாவேந்தன் புதிதாகக் கேட்கவில்லை. அவனுக்கு முன்னோடியாக வாழ்ந்த வள்ளற். பெருமானும் கேட்டார்.