பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

261


இந்தியை அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்வதென இந்திய அரசியல் நிர்ணய சபை முடிவு செய்திருக்கிறது. சட்டபூர்வமாக இந்தியை இந்தியாவின் அலுவலக மொழியாக ஆக்குவதற்கு முன் இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியில் பயிற்சி பெற தக்க முயற்சிகள் செய்யப்பெற வேண்டும் என்றும், அதற்குரிய கால இடைவெளி தரப்பெற வேண்டும் என்றும் முடிவு எடுக்கப் பெற்றது.

இந்தச் சூழ்நிலையில் தமிழக மக்கள் தொடர்ந்து இந்தியைப் படிப்பதற்குக்கூட எதிர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனினும் மத்திய அரசும் மாநில அரசும் ஒத்துக்கொண்ட மும்மொழித் திட்டத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி அளவில் பரவலாக இந்தி படிக்கத் தொடங்கினார்கள். எனினும் இந்தி எதிர்ப்புடைய அரசியல் கட்சிகள் சலசலப்பை உண்டுபண்ணி கொண்டே இருந்தன. மாநில அரசும் கொள்கைக்கேற்ற நிர்ணயிப்பைக் கையாளாமல் "கட்டாயமில்லை” என்றும் "தேர்வு! இல்லை" என்றும் அடிக்கடி இந்தி படிக்கும் உணர்ச்சியை ஆர்வத்தைத் தடுத்து நிறுத்தின. ஆதலால் தமிழக மாணவர்கள் பெரும்பாலோர் இந்தியில் தயாராக இல்லை. பெரும்பாலோர் இந்தியில் தயாராக இல்லை. பெரும்பாலோர் மொழியில் தயாராவதற்கு உரிய முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசும் முழு அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் சட்டப்படி இந்தி-இந்தியாவின் அலுவலக மொழியாக 1965 ஜனுவரி 26-ல் வந்துவிட்டது என்ற செய்தி இந்தி பேசாத மாநில மக்களிடத்தில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தந்துள்ளது. மொழிவழித் தொடர்பானதும் வாழ்க்கை நலனோடு பின்னிப் பிணைக்கப் பட்டதுமாகிய ஒரு சிக்கலுக்கு வெறும் வாக்குறுதிகளால் மட்டும் தீர்வு காண முடியாது. இந்திக்குச் சட்டப்படி உரிமை, தாய்மொழிக்கோ அல்லது ஆங்கிலத்துக்கோ சலுகைத் தன்மையுடன் கூடிய வாக்குறுதிகளால் பாதுகாப்பு

கு.xiii.18.