பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

263


எதிர்ப்பு உணர்ச்சி தமிழ் ஆட்சிமொழி இயக்கமாகவே வளரவில்லை. அது ஆங்கில ஆட்சிமொழி இயக்கமாகவே உருவெடுத்தது. அது மக்கள் இயக்கமாக இருக்குமாயின் நிச்சயமாக தமிழ் ஆட்சிமொழி இயக்கமாகத்தான் வடிவெடுத்திருக்க முடியும். அங்ஙனம் இல்லாததின் காரணத்தால் முன்னணிச் சமுதாயத்தினர் தங்களுடைய நலனுக்கு என்று திட்டமிடுடு செய்யக்கூடிய ஒரு காரியம் இந்தி எதிர்ப்பின் பேரால் நடத்தும் ஆங்கிலப் பாதுகாப்புப் போர் என்பதும் நமது கருத்து. எது எப்படியிருப்பினும் இந்தியாவின் இணை ஆட்சிமொழியாக இந்தியோடு ஆங்கிலம், பிராந்திய மொழிகள் இந்தி பெற்றுள்ள இடத்தை பெறுகிற காலம்வரை நீடிப்பது அவசியம்.

இந்தியும் ஆங்கிலமும் மத்திய ஆட்சியின் அலுவலக மொழியாக இருப்பினும் மத்திய அரசின் அலுவலர் தேர்வுகளில் தாய்மொழியில் எழுத உரிமை வேண்டும். பாராளுமன்றத்தில் தேசிய மொழிகள் அனைத்திலும் பேசும் உரிமை வேண்டும். மேலும் மத்திய அரசின் அலுவலகங்கள் மாநில அளவில் பொதுமக்களோடு தொடர்பு கொள்ளும் போது மாநில மொழியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் சட்டபூர்வமாக செய்யப் பெற வேண்டும். உயர்நீதி மன்றத்தின் ஒப்புதல் வேண்டும். மாநில அரசுகள் தாய்மொழியை பல்வேறு துறைகளிலும் வளம்பெற்ற ஒரு மொழியாக வளர்க்க காலம் தாழ்த்தாது முயற்சிகள் செய்தல் வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியாவை இணைக்கக் கூடிய ஒரு பொது உறவு மொழி (Link Language) மிகவும் அவசியமானது என்பதை நம் நாட்டு மக்கள் உணரவேண்டும். தென்னிந்திய மக்கள் குறிப்பாக இந்தி பேசாத மாநில மக்கள் நிச்சயம் இந்தியை ஒரு உறவுமொழியாக ஏற்றுப் படிக்க வேண்டும். அது போலவே இந்தி பேசும் மாநில மக்கள் வேறொரு இந்திய மொழியை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த நிலை ஏற்படாத வரையில்