பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசின் அலுவலகத் தேர்வுகளை, தாய்மொழியில் எழுத அனுமதிக்கும்படி தமிழ்நாடு காங்கிரசு மகாசபை கேட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுப்படையாக, மொழிச் சிக்கலில் மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்திருக்கின்ற முடிவுகள் வரவேற்கத் தக்கவைகளேயாம். ஆனாலும், இந்த முடிவுகளை நிறைவுபடுத்துவது எப்படி என்பதுதான் பெரிய கேள்வி. அரசு வழங்குகின்ற உரிமைகள் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். இந்திய உயர்நீதி மன்றத்தில் செல்லுபடியாகக் கூடியதாக இருக்க வேண்டும். இதை நினைவில் கொண்டு மத்திய அரசயுைம் மாநில அரசையும், நீண்டு நிலைத்திருக்கக் கூடிய ஏற்பாட்டை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அலுவலக மொழி எதுவென்ற கேள்வியையும் மும்மொழிப் பாடத் திட்டத்தையும் ஒன்றாக்கிக் குழப்புவது நல்லதல்ல. இந்திய ஒருமைப்பாடு வளம்பெற மும்மொழிப் பாடத்திட்டம் இன்றியமையாத வொன்றாகும். வடமாநில மக்கள் தென் மொழி ஒன்றையும் தென்னகத்து மக்கள் வட மாநில மொழி ஒன்றினையும் நிச்சயம் படிக்க வேண்டும். மொழி ஆதிக்கத்தைப் பற்றிய தவறான கருத்து, மக்கள் மன்றத்திலிருந்து விலகிவிடுமேயானால், நிச்சயம் மும்மொழிக் கல்வித் திட்டத்தை மாணவர் உலகம் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளும். அதற்குரிய ஏற்பாடுகளையும் மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும். எப்படி? எந்தவொன்றையும் யாரும் இழக்காமல், இந்திய ஒருமைப்பாட்டை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அன்பு நெறி சென்று அமைதி காத்து வாழ்வோமாக!

12. அனைத்து மொழிகளும் ஆட்சி
மொழிகளாக வேண்டும்

இந்தி எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு மகிழ்வதற்குரியது: உங்கள் அனைவரையும்