பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்களுடைய இயக்கத்தின் வலிவே என்பதை வரலாறு கூறும்.

அன்று இந்தியைத் தடுத்து நிறுத்திய இயக்கம் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கமே. இந்தி பாரத நாட்டின் ஒரே ஆட்சிமொழி என்ற இயக்கம் தொடங்கப் பெற்றதிலிருந்து எல்லா மாநிலங்களிலும் ஒரே கட்சியினர் ஆட்சியில் இருந்ததால், இந்தி பேசாத மாநிலங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு இந்தி எதிர்ப்புணர்ச்சி இருந்தாலும் அதனை முழுமையாகக் காட்ட இயலவில்லை.

தொடக்க காலத்திலிருந்தே இந்தி எதிர்ப்புணர்ச்சி முனைப்புடையதாக இல்லாமல் தன்னிலை இழந்து உடன்பாடு செய்து கொள்வதில் நாட்டம் உடையதாகவே இருந்தது என்ற கசப்பான உண்மையை மறப்பதற்கில்லை. இந்தியின் நிழலில் சலுகை கோருவோருக்கும் சமவாய்ப்புக் கோருவோருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு எப்படி நீதியைத் தழுவியதாக இருக்கும்?

இந்த அவல நிலையில் இந்தியைப் பாரதத்தின் ஆட்சி மொழியாக இருசாராரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையே உருவாயிற்று. ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தியுடன் இணையாட்சி மொழியாக நீடிப்பது என்ற கேள்வியே இருந்தது. ஆதலால், உண்மையில் இந்தி எதிர்ப்பு இயக்கம் - முனை மழுங்கி ஆங்கில நீடிப்பு என்ற திசையில் திரும்பி விட்டது.

இந்தி பாரதத்தின் ஆட்சிமொழியாவது பற்றிய விவாதம் அரசியலமைப்பு சபையில் நடந்து வாக்கெடுப்பிற்கு விட்ட போது இந்திக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சம நிலை வாக்குகளே கிடைத்தன். 74-74 வாக்குகளே கிடைத்தன. இந்தி மொழி - ஆட்சிமொழி பற்றிய விவாதம் மீண்டும் அரசியலமைப்புச் சபையில் வந்தது. கடைசி வரையில் இந்தி அரசியலமைப்புச் சபையில் பெரும்பான்மை வாக்கு பெற்று