பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

283


வருகின்றன. இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிட்டது. கல்லூரிப் படிப்பிலும், அறிவியற் படிப்பிலும், மேற்படிப்பிலும் ஆங்கிலம் பெற்றிருந்த இடத்தை இந்தி கைப்பற்றி விட்டது. ஆனால் இந்தி அல்லாத பிறமொழிகள் பேசப்படும் மாநிலத்து மக்கள் இந்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆங்கிலத்தையும் அகற்ற முடியாமல், தாய்மொழியையும் ஆட்சிமொழியாக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் கையறு நிலையில் தவிக்கின்றனர்.

அதனால் அந்த மக்கள் தம் தம் தாய்மொழி உணர்ச்சியை இழந்து வருகின்றனர். அதன் பயனாக அவர்கள் அறிவியலில் வளரவில்லை. வளர்ந்துகொண்டு போகும் உலகத்திலிருந்து நெடுந் தூரத்திற்குப் பின் தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ் நாட்டின் பட்டதாரி மாணவன் ஒருவனுக்கு விண்வெளிக் கலத்தின் நுட்பம் தெரியாது. காரணம் அவன் அறிவியலை தாய் மொழி மூலம் படிக்கவில்லை. கடந்த 28 ஆண்டுகளாக இந்தி மொழி வளர்ந்திருக்கிறது. இந்தியைத் தாய் மொழியாக உடைய மாணவர்கள் வளர்ந்திருக்கின்றனர். இந்தி அல்லாத மொழி பேசும் மாணவர்கள் வளர்ச்சிக்குரிய வாய்ப்பினைப் பெறவில்லை. இந்தியைத் தாய் மொழியாகவுடைய சில மாநிலங்களில் இந்தி வளர்கிறது. இந்தியைத் தாய் மொழியாகவுடைய மாணவர்களும் வளர்கின்றனர். இந்தியைத் தாய் மொழியாகப் பெறாத மாணவர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களுட்ன் போட்டி போட முடியவில்லை.

இந்தியைத் தாய்மொழியாகப் பெறாத மாணவர்கள் மேல்நிலை பெறமுடியவில்லை. ஏன்? அவர்கள் அந்நிய மொழியாகிய ஆங்கிலத்திலேயே படித்து வருகின்றனர். அதனால் அயல்மொழிச் சொற்களையும் சொற்றொடர்களையும் புரிந்து கொள்ளப் பெருமுயற்சி தேவைப்படுகிறது. கால அளவும் கூடுதலாகிறது. முயற்சியின் அளவு