பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



6. சாதிச் சிக்கல் தீர ஒரு பரிந்துரை


பிறப்பின் அடிப்படையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முன்னேறியோர், தாழ்ந்தோர் என்று நிர்ணயிப்பது தவறு; முறைகேடு, பழைய சமூக அமைப்பை, சாதி முறைகளை, குலகோத்திர அமைப்புகளை அப்படியே நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கருதுவோரின் எண்ணத்திற்கு வலிவு கொடுத்து விட்டது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆதலால் சாதி முறைகளாலும் அவ்வழிப்பட்ட வேற்றுமைகளாலும் அழிந்து கொண்டிருக்கும் நம்முடைய சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். பின்தங்கியவர்களுக்கு உதவி என்ற கொள்கை. இப்போது சாதி முறைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. ஏன்? பழனியில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் பிராமணியத்திற்கு உயிர்ப்புக் கொடுக்ககூடிய எண்ணம் எதிரொலித்தது என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஆசாரத்தின் பெயரால் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்தல் என்பது அவர்களுடைய கொள்கை. இது சாதி முறையில் நம்முடைய சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறது என்பதற்கு ஒரு சான்று.

சாதி வேறுபாடின்றி எல்லாரும் அருச்சகராகலாம் என்ற சட்டம் இந்திய உயர்நீதி மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை; தோற்றுப் போனது ஏன்? நம்முடைய சமுதாய அமைப்பு – சாதி முறை என்ற கொள்முறை நெகிழ்ந்து கொடுக்காததனால்தானே!

விடுதலை பெற்று முப்பத்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. நம்முடைய குடியரசு நாடு மதச்சார்பற்ற நாடு. சுதந்திர சோஷலிசக் குடியரசு நாடு. இத்தகு நாட்டில் சாதி முறைகள் ஏன்? அதுவும் துறவிகளிடத்தில் கூட உண்மையான துறவிகளும் இதற்கு விலக்கில்லை; ஏன்? இந்து சமயம்