பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆதலால், நலிந்தவர்கள் வளர்ந்தவர்களோடு வளர்ந்து வந்து சமநிலையில் நிற்கும் வரை தகுதி, திறமை என்று பேசுவது ஏமாற்று வித்தையேயாகும். வளராதவர்கள் வளர வழி தேவை.

ஆதலால், தாழ்த்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு உரிய ஒதுக்கீடுகள் நியாயமானவை. இந்த ஒதுக்கீடுகளுக்குச் சாதி அடிப்படையில் இலக்கணம் வகுக்காமல் தகுதி நிலையில் இலக்கணம் கண்டு நடைமுறைப் படுத்துதல் நல்லது.

அதாவது:

1.சமுதாய அமைப்பில் தீண்டத்தகாதவர்களாக வாழ்பவர்கள் சமூகத்தின் அங்கீகாரம் பெறாது ஒதுங்கி வாழ்பவர்கள்.

2.கல்வியில் பின் தங்கியவர்கள்

3.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.

என்ற இம்மூவகையிலும் பின் தங்கியவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகக் கருதப்பெறல் வேண்டும்.

சிறந்த கல்வி பெறுவதில் பரம்பரையும் சூழ்நிலையும் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன என்பது கல்விச் சிந்தனையாளர்கள் கருத்து. பலநூறு ஆண்டுகளாகக் கல்வி பெறுதற்குரிய வாய்ப்பை இழந்த குடும்பங்கள் உள்ளன. கல்வி பெறாதவர்கள் வாழும் சூழ்நிலையும் கல்விக்கு எதிர்மறைதான் என்பதை விளக்கிக் கூற வேண்டியதில்லை. பேரனைத் திருத்த வேண்டுமானால் பாட்டியைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும் என்பது பழமொழி. ஆதலால், மூன்று தலைமுறைகள் தொடர்ச்சியாகப் பட்டப்படிப்புப் பெற்ற பட்டதாரிகள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்வியில் பின் தங்கியவர்களாக மாட்டார்கள் என்று விதி வகுக்கலாம். இத்தகைய வாய்ப்புப் பெறாதவர்களுக்குக் கல்வி