பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களுக்கும் உணவு அளித்துக் காப்பவை கிராமங்கள்தாம்; ஆயினும் கிராமங்கள் கவனிக்கப்பெறவில்லை. வசதியாக வீடுகள்கூட கிராமப்புறத்தில் இல்லை. தரமான கல்வி மருத்துவமனைகள் ஆகியன கிராமங்களில் இல்லை. ஆதலால் யாவரும் விரும்பி, கிராமத்தில் குடியேறுவதில்லை. கிராமத்தில் இருப்பவர்களும்கூட வசதிகளை நாடி நகரத்திற்கே செல்கின்றனர். இது வருந்தத்தக்க ஒரு நிகழ்வு. பண்டைக் காலத்தில் கிராமங்களே தானியக் களஞ்சியங்களாக விளங்கின. கிராமங்களில் செல்வச் செழிப்பு இருந்தது. மக்களாட்சி முறை தழுவிய கிராமிய சுயாட்சியும் தன்னியல் பாகவே ஒரு கூட்டுறவு வாழ்க்கையும் அமைந்திருந்தன. “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராக உலகியல் நடத்தி” வந்துள்ளனர். காலப்போக்கில் அந்நிய ஆட்சியில் தோன்றிய ஜமீன்தாரி முறைகளாலும் நிலப் பிரபுத்துவ முறைகளாலும் கிராமங்கள் தன்நிலை தடுமாறின. கிராம மக்கள் வறுமையின் இரும்புப் பிடியில் சிக்கினர். நாள் ஒன்றுக்கு உயர் வாழ்வதற்குத் தேவையானவை கூடக் கிடைக்க முடியாதவாறு வறுமையிருள் சூழ்ந்தது. இதன் காரணமாகக் கிராம சமுதாயத்தில் ஒழுங்கினங்களும் சிதைவுகளும் தலைகாட்டத் தொடங்கின. விடுதலை பெற்ற பிறகு நிலை தடுமாறிய கிராமங்களைச் சீரமைப்பதற்கு இமாலய முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றன. கிராமப் புறங்களின் மேம்பாட்டுக்காகத் தீட்டிய திட்டங்கள் பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கும் செல்வந்தர்களுக்குந்தான் பயனளித்துள்ளது என்பதைப் புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. கிராமங்களில் சாதாரணப் புறநிலை மாறுதல்கள் சில நடந்துள்ளன. சாலைகள் அமைந்துள்ளன; மற்றும் சில கட்டடங்கள் கட்டப் பெற்றுள்ளன.

"Every village should have three things-a Panchayat, a Co- operative and a School. Only then the foundation of Country will be strong.