பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

375



(I Call therefore a complete and generous education which fits a man to perform justly skilfully and magnanimously all the offices, both private and public, of peace and war") என்பது மில்டன் வாக்கு;

கடவுள் ஒருவரே. அவரும் ஞானத்தின் திருவுரு பேரறிவு, வாலறிவு இயற்கையிலே எல்லையில்லா இன்ப முடையான். அவனை நாம் வழிபடுவது எல்லாம் அவனுடைய அறிவை, ஆற்றலை நாமும் பெற்று அந்த அறிவு. ஆற்றலை நம்முடைய பொறிபுலன்களில் தேக்கி வெற்றி பொருந்திய மானுடமாக வாழ்வதற்கேயாம். இந்த ஆன்மவியல் வாழ்க்கை ஒன்றி இருத்தலால், உள்ளக்கிழியில் ஓயாது உய்த்துணர்வதால் அக்கடவுளின் தண்ணருளில் பலகாலும் நனைந்து எழுந்து சிந்திக்க வேண்டும். இத்தகு கடவுள் நம்பிக்கையிருந்தால் சண்டைகள் ஏன் வருகின்றன. சச்சரவுகள் ஏன் வருகின்றன? இன்று சமயங்கள் வாழ்வாக இல்லாமல் ஆதிபத்திய நிறுவனங்களாகி மக்களுக்கு நலம் பயக்கும் நெறியிலிருந்து பிறழ்ந்து விட்டன. மதங்களின் இரும்புப் பிடியிலிருந்து விலகி, சமயச் சார்பற்ற சிலத்தை வாழ்க்கையில் துணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! பாரதி சொன்னபடி,

“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்”

என்பதே நமது நெறியாக அமைதல் வேண்டும்.

இந்தியாவின் பாரம்பரியமான சமயச் சார்பற்ற தன்மையையும் ஒப்புரவு நெறி நின்றொழுகும் பண்பையும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தாய்மொழியில் சிந்தனை செய்யுங்கள் தாய்மொழி வாயிலாகக் கற்று அறிவை விரிவாக்குங்கள்! நமது மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகாலமாகவே, மனித நேயச் இந்தனைகள், பொதுமைக் கருத்துக்கள் தோன்றி, வளர்ந்து வந்துள்ளன. ஆயினும் அந்தச் இந்தனைகளைச் செரிமானம் செய்து கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாததால்