பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அகப்படுகிறது. இந்த நிலையில் கை அசைகிறது. கையிலிருந்த கம்பும் அசைந்து தூரத்தில் இருந்த பொருளை நகர்த்துவதை அறிகிறான்; ஆய்வு செய்கிறான். இந்த அனுபவமே கருவிகள் தோன்றுவதற்குத் துணை செய்தது. அறிவியல் வளர்ச்சியில் கருவிகளுக்குரிய பங்கு மகத்தானது. அறிவியலும் கருவிகளும் சேர்ந்து மனித வாழ்க்கையை இன்று மகோன்னதமாக வளர்த்திருக்கின்றன. மனித நாகரிகத்தின் தொடக்கமே. மனிதன் கருவிகளைக் கண்டு பயன்படுத்தத் தொடங்கிய காலம்தான்.

இயற்கையாக விளைந்த காய்கனிகளை உண்டு வாழ்ந்தவன், காடு வெட்டி நிலம் திருத்திக் கரும்பும் நெல்லும் பயிர்செய்து வாழ்க்கையின் அநுபவத்தை வளர்த்திருக்கின்றான். மனிதன், விவசாயத் தொழிலில் வளர்ந்து இன்று விவசாயத் தொழில் நுட்பத்தை வளர்த்து, எந்த ஓருயிரும் உலகத்தில் உணவின்றிச் சாக வேண்டாத நிலையை உருவாக்கியுள்ளான். அறிவியல் அடிப்படையில் வாழத் தலைப்பட்டால் ஒரு நூற்றாண்டு வாழலாம்; அதற்கு மேலும் வாழலாம்! மனித வாழ்க்கையில் உழைப்பு, கருவிகள் கண்டு பிடிப்பு, கருவிகள் வளர்ச்சி ஆகியவற்றால் வாழ்க்கை வளர்ந்து வந்தது. வளர்ந்து வருகிறது.

அறிவியல் மெள்ள மெள்ளத்தான் வளர்ந்தது. ஆனாலும் நிலையான, வளமான மாற்றத்தை இந்தப் புவிக்கோளத்திலும் மானுட வாழ்க்கையிலும் தந்தது. கற்களைக் கருவியாகப் பயன்படுத்திய நிலையிலிருந்து படிமுறையில் உலோக காலம். இரும்புக் காலமென வளர்ந்து இன்று அணுவைக் கருவியாகக் கொண்டு இயக்கும் நிலைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. மானிட வாழ்க்கை; இன்று இயற்கையில் மனிதனின் ஆளுமைக்கும் மேலாண்மைக்கும் அகப்படாதது எது? என்று கேட்டால் இல்லையென்றே கூறலாம். வெள்ளம், புயல், எரிமலை, நிலச்சரிவு முதலியன இன்னமும் அடங்கவில்லை. இவற்றை அடக்க முடியாது