பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனாலும் தொடர்ச்சியில்லை. மனிதனோ அன்பு காட்டவே படைக்கப் பட்டவன். அவனுடைய உருவ அமைப்பு, மற்றவர்களிடத்தில் அன்பு காட்டவும், அன்பைப் பெறவுமே அமைந்தது. அன்பு மனிதனின் உயிர். அன்பு இல்லா மனிதன் என்புக் கூடு. இன்று சமுதாயத்தை அறித்து அழிக்கும் நோய் அன்பின்மையேயாகும். கோட்டைகள், கொத்தளங்கள், கொலைக் கருவிகள், சிறைச்சாலைகள், சட்டங்கள், காவலர்கள், பூட்டு சாவிகள் இவையெல்லாம் பெருகி வளர்ந்திருக்கின்றன. அன்புத் தேவதையின் மரணக் குழியிலே தானே முன்னர்க்கூறியவை பெருகி வளர்ந்திருக்க வேண்டும். ஈரம், பசும்பல் வளரத் துணை செய்யும், ஈரம் என்ற சொல்லுக்கு அன்பு என்றும் பொருளுண்டு. “ஈரம் அளைஇ” என்பது வள்ளுவம். கடவுளின் மறுபெயரே அன்பு. “அன்பே சிவம்” என்பது திரு மந்திரம். அன்பின்மை சமுதாயத்தைப் பற்றி அலைக்கும் என்புருக்கி நோய். அன்பின்றி வாழும் வாழ்க்கை வெறும் பாழ்! சமுதாயம் செழிக்க அன்பின்மையாகிய கேட்டினைக் களைவோம்! மனிதன் அகம் விரியும்! நெஞ்சு நெகிழும் உணர்வு சிறக்கும். உலகம் தழைக்கும்.

அன்பு சிறைகளைக் கடந்தது. எல்லைகளைக் கடந்தது. அன்பு வாழ நினைக்காது; வாழ்விக்கவே நினைக்கும். இன்று மனிதன் “நான்”, ‘எனது’ என்ற நச்சுப் பாம்புகளால் தீண்டப்பட்டுக் கிடக்கிறான். இந்த நஞ்சு அறிவை அழித்திருக்கிறது. உணர்வை உருக்குலையச் செய்திருக்கிறது. ஏன்? இந்த நஞ்சினால் மனிதன் பேயாகிவிட்டான். ஐயோ; பரிதாபம்! நான் என்பது வாழ முடியாது. ‘எனது’ என்பது எய்ய்பினில் வைப்பாகாது. “நாம்” என்பது நல்ல மந்திரம். ‘நாமில்’ நானும் இருக்கிறேன். உலகம் இருக்கிறது. நம்முடையது ஆகா! இந்த சொல்லுக்குத்தான் என்ன அற்புத சக்தி இருக்கிறது! உலகம் தழீஇ வளரும் சொல்! ஒருவருக்காகப் பலர், பலருக்காக ஒருவர் என்ற கூட்டுச் சமுதாய அமைப்பு சொர்க்கத்தின் ஊற்றன்றோ! வள்ளுவம் இந்தத் தூய வாழ்க்கையை “ஒப்புர