பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேங்கிய நீர்நிலைகளாக ஆக்காதீர்! அவற்றை ஏரிகளாக்குங்கள்! நம்முடைய நாட்டு மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தை உடையுங்கள்! மாற்றுங்கள்! வளர்ச்சி காணுங்கள்! சூழ்நிலைமீது பழிபோடாதீர்கள்! வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்குங்கள்! நல்ல வாய்ப்புகளை ! சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டு ஏங்கி இருக்காதீர்கள்! வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவேயாம் ! வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்! கார்ல் மார்க்ஸ் கற்றுத் தந்த வாழ்க்கை இதுவே! மாற்றங்களும் வளர்ச்சியும் தேவையென்பதே மார்க்ஸ் தந்த வாழ்க்கைப் பாடம்!

1.5.90
2. உழைப்பு

மானிட வாழ்வின் ஆக்கம் அனைத்தும் உழைப்பின் விளைவே! மானிடத்தின் உடல், உழைப்பிற்காக அமைந்த கருவி! உழைப்பில் ஈடபடாத உடம்பு, பயனற்றுப் போகிறது; நோய்வாய்ப்படுகிறது. வாழ்வு அழிகிறது! உடம்பு - அற்புதமான உழைப்புக் கருவி! இன்று மானிடத்திற்கு மதிப்பில்லை! அங்கீகாரம் இல்லை! இன்றைய மதிப்பீடு, பணத்தைச் சார்ந்திருக்கிறது! இன்றையச் சமுதாயம் பண மதிப்பீட்டுச் சமுதாயம். கார்ல் மார்க்ஸ் இந்தப் பணமதிப்பீட்டு முறையையும் கீழ்மையையும் கதே, ஷேக்ஸ்பியர் போன்ற கவிஞர்களின் மேற்கோள்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்குகிறார் ஷேக்ஸ்பியர்:

"The yellow slave
Well knit and religious, bless the accursed
Make the hour leprosy adorned, place
theives And give them title, knee and approbation

With senators on the bench".
என்று கூறுகிறார். அதாவது,