பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

439



ஏன்? இறைவனே ஓயாது உழைக்கும் தொழிலாளி! படைத்தல், காத்தல் இயற்றும் தொழிலாளிதானே கடவுள்! நாம் மட்டும் ஏன் உழைக்காமல் வாழ விரும்ப வேண்டும்? உழைத்து வாழ்வோம்! உழைப்பே வாழ்க்கையாக உருவாகுக!

3.5.90
3. மனித நேயம்

“மதம் மக்களுக்கு அபினி” என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். ஆம்! அவர் சொன்னது உண்மை! “ஆகா! ஊஹா மதத்தை அபினி” என்று மார்க்ஸ் சொல்லி விட்டாரே என்று அங்கலாய்ப்பதில் பயனில்லை. ஏன் சொன்னார்? எதனால் சொன்னார்? எப்படிச் சொன்னார்? என்று ஆய்வு செய்ய வேண்டாமா? உண்மையைத் தேடும் - ஞானத்தைத் தேடும் - ஆவேசம் வேண்டாமா? மார்க்சின் வாசகம்.

“மதத் தொடர்பான கருத்துகளை வழிபாடு செய்வதை அவர்கள் ஒரு மரபாகச் செய்திருக்கிறார்களே தவிர அவற்றை வளர்ப்பதில்லை - நியாயமான குறிக்கோள் இல்லை”

என்பது மதங்கள் எதற்குத் தோன்றின? ஏன் தோன்றின? மனிதர்கள் அறிவியல் சார்ந்த வாழ்வில் தலைப்பட்ட போது, கடவுள் நம்பிக்கை தோன்றியது. மதம், கடவுளைச் சார்ந்து எழுந்த கொள்கை கோட்பாடு! தொடக்க காலத்தில் மதம். மனித நேயத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது! காலப் போக்கில் மதம் மனிதனை மையமாகக் கொள்ளவில்லை. கடவுளின் பெயரால் புரோகிதர்களையும், புரோகிதர்களைப் பாதுகாக்கும் நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் காப்பாற்றும் சாதனமாக மதம் உருமாற்றம் பெற்று விட்டது. மதம் மதத்தைச் சார்ந்தவர்களிடையே கூடப் பொருளாதாரச் சுரண்டல் முறையில் கலகங்களையும் சண்டைகளையும்