பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

473


மனிதனுக்குத் தெரியாது. ஆதலால் டாக்டர் அம்பேத்காருக்கு செய்யும் நன்றி, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கடமைகளையும் உரிமைகளையும் பற்றி மக்களிடத் திலே பரப்பி, அரசியல் சார்ந்த விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். எல்லாரும் ஒரு நிலை, ஒரு விலை என்ற நியதியைப் பற்றிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சாதி மதங்களின் பாற்பட்ட சமூக மேலாதிக்கங்களைத் தகர்த்து நவீனச் சுரண்டல் முறைக்காரர்களிடமிருந்து இந்தியாவை மீட்பதும் கடை கோடி மனிதனுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கச்செய்வதும் நமது கடமை. டாக்டர் அம்பேத்கார் நூற்றாண்டு விழாவின்போது இந்தக் கடமையை நிறைவேற்ற உறுதி கொள்வோமாக!

1. எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலை யிலும் தீண்டாமையை யாரும் எந்த ஒரு செயலிலும் கடைப்பிடித்து ஒழுகுதல் கூடாது. தீண்டாமை என்பது சாதிப் பிரிவினைகளின் நிழலேயாம். ஆதலால், சாதிப் பிரிவினைகளையும் முற்றாக விலக்கி சாதிப் பிரிவினைகளின் முதிர்ந்த நச்சுப் பழமாகிய தீண்டாமையை விலக்க வேண்டும்.

2. சாதிப் பிரிவினைகள் தீண்டாமை முதலியவைகளைப் பழைய வடிவங்களினின்றும், மாற்றிப் புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்த வல்லாங்கு வாழ்வோர் முயல்வர். இந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும். இந்த நவீன முயற்சியில்தான் இன்றைய கல்வி உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் ஒரே தரமான கல்வி வழங்கப்படவில்லை. இன்றைய கல்விமுறை இரண்டு சாதி முறைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்து, இதனை மாற்றப் போராட வேண்டும். பழைய சமுதாய அமைப்பில் உடைமையே சொத்து. அதாவது நிலம். இன்றைய சமுதாய சொத்து. கல்வி, அறிவு, திறமை போன்றவை. இவற்றை இன்றைய சூழ்நிலையில் வாய்ப்பிழந்த