பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

518

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செந்நெல் அரிசி – எடுத்த குறிக்கோள்!

இனிக்கும் வெல்லக்கட்டி – இதந் தரும் அன்பு சர்க்கரைப் பொங்கல் – கன்னல்நிகர் வாழ்க்கை! உண்பித்து உண்போம்! மகிழ்வித்து மகிழ்வோம்! மாடுபோல உழைப் போம்! உழைப்பின் பயனை உலகுக்கு அளிப்போம்! உழைப்பதற்காக உண்போம்!

பொங்கலோ பொங்கல்!

மகிழ்ச்சிப் பொங்கல்!

பானையில் பால் பொங்குவது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்!

வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகள் தொலையட்டும்! சாதிக் குப்பைகள் அவிந்து சன்மார்க்கம் தோன்றட்டும்!

ஏழ்மை அகலட்டும்!

ஏக்கம் குறையட்டும்! எல்லாரும் வாழட்டும்!

கலகங்கள் போகட்டும்!

கலைகள் வளரட்டும்! மக்கள் மனத்தில் மகிழ்ச்சி வெள்ளம் நிறையட்டும்!

76. தமிழர் திருநாள் சிந்தனைகள்[1]

தமிழர் வாழ்வில் ஆண்டு முழுதும் பல திருவிழாக்கள்! மாதந்தோறும் விழாக்கள் உண்டு. இந்தியர்கள், சடங்குகள் – விழாக்களிலேயே பிறந்து வளர்ந்து வாழ்க்கையை முடிக்கின்றனர். தமிழர்களின் தணிவிழா, பொங்கல் விழாவேயாம். பொங்கல் விழா, இயற்கைக்கு முரணானது அல்ல. பயனற்ற


  1. மதுரை வானொலி 14.1.94