பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இடத்தைப் பெற்று விளங்க வேண்டும். மனித சமுதாயத்தில் நாகரிகம், பண்பாடு, விழுமிய சமயம், ஆகியன படி முறையாக வளர்ந்து இடம் பெற்றுக் கால் கொள்ளும் நாகரிகம் புற உலகியல் வாழ்க்கையைக் காட்டுவது. பண்பாடு அவ் ஒழுக்கத்தைக் காட்டுவது. விழுமிய சமயம் உயிர் உணர்வையும் ஒழுக்கத்தையும் காட்டுவது. இந்தப்படிமுறை வளர்ச்சி தமிழ் இனத்தில் மன அமைதி கொள்கின்ற வகையில் முறையாகவும், நிறைவாகவும் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ், சமய அனுபவத்தைக்கொண்டு விளங்கும் சொற்களில் ஒரு தலையாய மொழி என்று மேனாட்டு. அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழே ஒரு பக்தி மொழி. தொல்காப்பியந்தொட்டுப் பாவேந்தர் பாரதிதாசன் வரையில் பக்தி மரபு மாறவில்லை. ஆயினும், பாவேந்தர் பாரதிதாசன் தன்னுடைய வாழ்க்கையின் பிற்காலத்தில் மாறுபடப் பேசியும் எழுதியும் வந்தார். அது போது அவர் மாறுபட்டதும் கூட தமிழினத்தின் வழி வழி மரபில் வராத - தமிழ் நாகரிகத்துக்கு ஒவ்வாத - வழிபாட்டு முறைகளைத் தான் என்பதை அவரை உள்ளவாறு அறிந்தோர் உணர்வர். தொல்காப்பியம் நிலத்தையும் ஒழுக்கத்தையும் வகுக்கின்ற போதே அவ்வந்நிலத்திற்குரிய கடவுளையும் உரிமைப்படுத்திக் காட்டியுள்ளது.

புலவர்கள் போற்றும் தகுதியுடைய புறநானூற்றில் “நீலமணி யிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே” என்ற அடிகளும் “பணியீரத்தை நின்குடை முனிவர் முக்கட் செல்வர் நகல்வலம் செயற்கே” என வருவனவும் “நல்லவும் அல்ல தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்க மாயினும் ஒருவனுடையவை கடவுட் பேணேம் என்றாங்கு” என வருவனவும் சங்ககாலத் தமிழ்ச்சான்றோர் "வாழ்க்கையில் சிவநெறிச் சார்பும் பண்பும் விளக்கமுற இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். கற்றவர் போற்றும் கலித்தொகையில் இன்னும் தெளிவாகச் சிவநெறியின் சார்புகளும் வழிபடும் திருமேனிகளும்