பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

567


அங்ஙனம் மாறுபட்டு இருப்பதற்குக் காரணம், தமிழர் தம் சமயநெறி, திருவள்ளுவர் காட்டியது போலவோ, அப்பரடிகள் காட்டியது போலவோ இல்லை என்ற குறையாகவே இருக்கக்கூடும். இந்த மாறுபட்ட அணிக்கு நமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் பெரியார் தலைமை ஏற்றிருக்கிறார். அவரைச் சார்ந்தவர்கள் சிலர் உண்டு என்பதும் உண்மை இந்த நிலைமைக்குக் காரணம் முதலில் தமிழர்கள் சமயம், திருவள்ளுவரும், திருநாவுக்கரசரும் நின்று ஒழுகிய சமயம் போலவும் கண்டு காட்டியது போலவும், இல்லை என்பதை உணர வேண்டும். தமிழக சைவத் திருமடங்கள். இந்த நிலைமையினை உணர்ந்து திருவள்ளுவரும் திருநாவுக்கரசரும் காட்டிய சமய நெறியினை நடைமுறைப்படுத்துவரெனில் தலைவர் பெரியார் அவர்களுக்கும் மனமாற்றம் ஏற்படலாம் இந்த வகையில் தெளிவான ஒரு கருத்தை உருவாக்க இத்திருப்பத்தூர்த் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் உரிய வகையில் முயற்சி செய்வார்கள் என நம்புகிறோம்.

சைவமும் தமிழும்

தமிழ், நம்முடைய தாய் மொழி. நம்முடைய சிந்தனைக்குத் துணை நின்று நம்மை வளர்க்கும் மொழி. முன்னே தோன்றி மூத்த முது பெரும் புலவர்கள் கருத்துணவைத் தந்து ஊட்டி வளர்க்கும் மொழி. இந்த இனிய அன்னை மொழி தமிழர் தம் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் இடம் பெற வேண்டும். தாய்மொழியில் கல்வி, தாய் மொழியில் ஆட்சி, இவை நமது பிறப்புரிமை. இந்த உரிமைகளைத் தமிழர்கள், தடையின்றிப் பெற்று அனுபவிக்கும். இனிய சூழல், மலர்ந்துள்ளமையை உளமார நினைத்துப் பாராட்டி வாழ்த்துக் கூறுகின்றோம். இந்த இனிய சூழல் நீண்ட நெடிய நாள் நிலைக்க நமது பிரார்த்தனை, ஆயினும் தமிழைத் தோற்றுவித்தும் தமிழை வளர்த்தும்