பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விமரிசித்தல் ஆகியவைகளின் மூலம் வாக்காளர்களின் வாழ்வுத்துறை வளர்ச்சிக்குத் துணைநிற்கும் சக்தியே அது.

இதைத் தவிர மூன்றாவதாகவும் ஒரு சக்தி உலவுகிறது.

நமது நாட்டை அந்நியர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கங்காணிகளாக இருந்த ஜமீன்தார்களும், மன்னர்களும், நிலச்சுவான்தார்களும் இன்று சிலரைத் துணைக் கொண்டு எல்லோரும் வாழ்வதா? என்ற விபரீத உணர்வில் நிரந்தரமாக மக்களை ஆன்மீக ரீதிக்கும் உலகாயத ரீதிக்கும், நியாயத்திற்கும் முரண்பட்ட-வழிவழியாக வளர்ந்து வந்துள்ள அருளியல் வழிப்பட்ட சமயநெறிக்கும் முற்றிலும் முரண்பட்ட ஒரு கொள்கையைத் துணிந்து தர்மத்தின் போர்வையில் சமயத்தின் பேராலேயே சொல்லி சமூகத்தி லுள்ள-அழிந்து கொண்டிருக்கும் தீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி உயிர் கொடுத்து வல்லடி வழக்குப் பேசும் சக்தி. அதுவே மூன்றாவது சக்தியாகும்.

இம்மூன்று சக்திகளிலும், எந்த சக்தி ஊக்கப்படுத்தத்தக்கது? எந்த சக்தி ஒதுக்கப்படத் தக்கது என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் வாக்காளர்களாகிய உங்களுக்குண்டு என்று நாம் அறிவோம். எனினும், இந்த நாட்டின்மீதும், நமக்குள்ள கடமையுணர்ச்சியால், உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மீண்டும் நினைவுபடுத்துவது நல்லது என முனைந்தோம். மூன்றாவது சக்தியைச் சமுதாயத்தினின்றும் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது வாக்காளர்களின் தலையாய கடமை என்பதையும் நினைவு படுத்துகின்றோம்.

அத்தீயதை ஒதுக்கும் கடமை முயற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை, என்னைக் காட்டிலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

மற்றைய இரண்டு சக்திகளிலும் முதலாவது பரந்த தேசிய மனப்பான்மையுடையது-நாட்டின் முன்னேற்றம்