பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

166


சார்ந்தாரைக் காத்தற்கும் காதலும் கற்பும் பயன்படும் பொழுதுதான் அறம் ஆகிறது. இறைமை ஆகிறது.

அதனால், தமிழ்ப் பெண்டிர் தத்தம் கணவனின் தவறுகளை நெஞ்சத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று ஐங்குறுநூறு எடுத்துக் காட்டும். கண்ணகி பெண்ணிற் பெருந்தக்காள். கண்ணகி தன் கணவனின் தவற்றைக் காமவேளிடம் சொல்ல எங்ஙனம் ஒருப்படுவாள்? அதனாலேயே “பீடன்று” என்று மறுக்கிறாள்.

அதுமட்டுமன்று. மாதவியிடம் தங்கியிருப்பது கோவலனுக்கு விருப்பமாயின் அவனது விருப்பத்திற்குக் குறுக்கே நிற்பானேன் என்று கருதி, கோவலன் மகிழ்வுக்கு முதன்மை கொடுக்கும் கண்ணகியின் திறமும் புலப்படுகிறது.

இதனைக் கொலைக்களக் காதையிலும் கண்ணகி புலப்படுத்துகிறாள். கொலைக்களக் காதையில் கோவலன் தன்னிலை நினைந்து வருத்திக் கூறுகிறான்; தன் குறைகளைப் பாராட்டாது, கண்ணகி தன்னுடன் மதுரைக்கு வந்தமையைப் பாராட்டுகிறான்.

அப்போது கண்ணகி “போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்யான்” என்று கூறுகிறாள். இங்குப் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்று கண்ணகி கூறியது முறையன்று: இடித்துக் கூறியது போலத்தான் என்று சிலர் கூறுவர். இது தவறு.

இங்கு ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்பது போற்று தலுக்குரிய ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றுதான் பொருளே தவிர, அது இழிநிலைக் கருத்தைத் தராது

அதோடு, கண்ணகி பெரிய இடத்துப் பெண், கோவலனுடைய நடைமுறையைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமையை அறிந்திருக்கிறாள்; உணர்ந்திருக்கிறாள். சமூகத்தின் நினைப்பு, கோவலனுக்கு எதிராக இருக்கிறது.

இ.V 12.