பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னுடைய தெளிவான கருத்தை வலியுறுத்தாமல் கணவனின் வாயிலாகவே தான் கள்வன் அல்லன் என்று கேட்டறிய விரும்புகிறாள்; துடிக்கிறாள்.

தனது கணவன், கள்வன் என்று உலகம் பழி தூற்றும்படியாக மன்னவன் செய்த தவற்றை நினைத்து நினைத்து, அவள் வெம்புகிறாள். அது சீற்றமாக உருவெடுக்கிறது. கணவனை இழந்த நிலையிலும் கணவனைக் காணவேண்டும். திரும்ப அடையவேண்டும் என்றெல்லாம் ஆவல் கொள்ளாமல் “அவன் தீதறு நல்லுரை” கேட்க விரும்புகிறாள்.

தீதறு நல்லுரை யாது, கோவலன், கள்வன் அல்லன் என்பதுதான். இந்த நல்லுரையைக் கேட்கவே அவள் மதுரைப் பெண்டிரை நாடுகிறாள். பதில் இல்லை. மதுரைச் சான்றோரை நாடுகிறாள்; பதில் இல்லை. மனித உலக வரலாற்றிலேயே நீதிக்குச் சார்ந்து பேசி வழக்காடும் பழக்கம் இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

கடைசியாகத் தன் கணவனைக் கள்வன் என்று பழிசுமத்திக் கொன்ற அரசனையே நாடுகிறாள். நீதி கேட்கிறாள். தேர்ந்து தெளியும்படி கேட்டுக்கொள்கிறாள். அரசனோ, தேர்ந்து தெளிய உடன்பட்டான் இல்லை.

தேர்ந்து தெளிந்து சொல்வதாக, உரியன செய்வதாகப் பாண்டியன் சொல்லியிருந்தாலும் கண்ணகியின் சீற்றம் தணிந்திருக்கும். ஆனால், பாண்டியன் “கள்வனைக் கோறல் கடுங்கோலன்று” என்று தம் நிலைமையையே சாதிக்கிறான். அதனால்தான், கண்ணகிக்கு ஆற்றொனாத் துயரம் தோன்றி வழக்கைத் தொடுக்கிறாள்.

அப்பொழுதும் அந்தச் சூழ்நிலையிலும் கண்ணகிக்கு ஆத்திரத்தில் பாண்டியன் மீது பழி சுமத்தும் எண்ணம் இல்லை. அறிவார்ந்த நிலையில் வழக்கை வைக்கிறாள். தன்