பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

23


அரசுகளும் நிலை தளர்ந்து கெடுவதற்கு, கோளினைக் கேட்கும் கெட்ட பழக்கமே காரணம். ஆனால், இன்றும் கோள் சொல்வோர் எண்ணிக்கை பெருகி வளர்ந்து வருகிறதே தவிரக் குறையவில்லை.

நாடு தழுவிய நிலையிலே கூட இன்று கோள் சொல்வோர் கொட்டமடித்து வாழ்கின்றனர். கோள் கேட்கும் நிலை உள்ள வரையில் நாட்டில் அச்சத்தை அகற்ற முடியாது; சிறு செயல் செய்யும் கயவரை ஒடுக்க முடியாது. ஆட்சியாளருக்குக் கோள்கேட்கும் பழக்கம் இருக்குமாயின் அது அவர்கட்கு தீங்கு; அவர்கள் ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கும் தீங்கு.

ஆட்சியாளர்கள் கோள்கேட்கக் கூடாது என்பதற் காகத்தான் “ஒற்றர் அமைத்துக் கொள்ள உரிமை தந்தது சமுதாயம். கோள் சொல்பவன், சண்டைகளை வளர்ப்பவன்; கலகங்களைத் தூண்டுபவன். ஒற்றர் சொல்வது சண்டை கள்ைத் தவிர்க்கும், கலகத்தைத் தவிர்க்கும்.

எனவே வெள்ளைக்குடி நாகனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை அறமுரைத்து ஆற்றுப்படுத்துகிறார். கோள் சொல்பவன் வார்த்தையைக் கேட்காதே! ஏரைப் பாதுகாக்கும் குடியினரைப் பாதுகாப்பாயாக! அவ்வழி மற்ற குடியினரையும் பாதுகாப்பாயாக! என்பது கருத்து.

ஆதலால் நாடும் நாட்டில் வளமும் சிறக்க நல்லாட்சி அமைய வேண்டும்.

“முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே,
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்”