பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்த்துதல்-வசைபாடுதல் இன்று நடைபெறுகிறது. ஆனால் கம்பன், நிறுத்துப் பேசுகிறான். இராமனின் சிறப்பைப் பாடுவதற்காகக் காவியம் செய்தானாயினும் இராவணனின் ஆட்சிச் சிறப்பைப் புகழ மறந்தானில்லை, அதுபோலத் தான் முடியுடைய அரசுகளைப் பாடிய அவன், அரசேயில்லாததனி உடைமையே இல்லாத ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தைப் பற்றியும் என்ணுகிறான்.

கம்பனின் பொதுவுடைமைக் கருத்து வெறும் “உடோப்பியா” அல்லது கற்பனை என்பர் சிலர். இது. மார்க்சீய பக்தியில் விளையும் கருத்து. கம்பனை விட மார்க்ஸ் பொதுவுடைமைச் சமுதாயத்தை எப்படி அமைப்பது என்ற வகையில் தெளிவு கண்டுள்ளார் என்பது உண்மை. ஆனால் கம்பனுக்குப் பின் இருந்த காலம் மார்க்சுக்குத் துணையாக இருந்தது. கம்பன் விரிவாக வழிமுறைகள் சொல்லாமையின் காரணமாக கம்பனின் கருத்து கற்பனையாகி விடாது. கம்பனின் கருத்து முற்றாக உண்மை. கம்பன், தனியுடைமைச் சமுதாயத்தின் தீமைகளையும் சொல்கிறான். தனி உடைமைச் சமுதாயத்தில் வள்ளல்களிருப்பார்கள். எங்கு வள்ளல்கள் இருக்கிறார்களோ அங்கு வறுமையாளர்களும் இருப்பார்கள். ஒருவர் உழைப்பின் செல்வத்தை முறைகேடாக உரிமைப்படுத்திக் கொண்டு வறுமையைப் படைத்துப் பின் வறுமையை மாற்றும் வள்ளல்களாகவும் காட்சியளிப்பர். இந்தத் தந்திரத்தைக் கம்பன் தோலுரித்துக் காட்டுகிறான்.

“வண்மை இல்லை ஓர் வறுமையின்மையால்”

என்பது கம்பன் வாக்கு.

அடுத்து இன்று நாட்டை அலைக்கழிப்பன களவு, காவல் என்பன. இன்று காவல்துறை வளர்ந்து கொண்டே வருகிறது. காவலுக்குரிய கருவிகளும் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்று செல்வத்தை ஈட்டும்