பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ? அன்றே! வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
...........................”

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்அகல் ஞாலம்
அதுநன்கு அறிந்தனை யாயின் நீயும்”

“நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தரு வர் அடங்கா தோரே.

(புறம்; 35-15-22, 27-34)

அரசு முறை அமைந்தவுடனேயே அரசுக்கு மக்கள் வரி கொடுப்பது கடமையாகிறது; அரசுக்கு மக்களிடம் வரி வாங்கிக் கொள்ளுதல் உரிமையாகிறது. இது தவிர்க்க முடியாத நியதி.

சங்கத் தமிழரின் ஆட்சியியலில் இந்த வரிக்கொள்கை தெளிவாக வரையறுக்கப் பெற்றுள்ளது. அரசன் வரி விதிப்பில் மட்டுமன்று, வரி வசூலிக்கும் முறையிலும் சிறந்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையும் வலியுறுத்தப் பெற்றுள்ளது.

பாண்டியன் அறிவுடை நம்பி என்ற பேரரசனைப் பிசிராந்தையார் என்ற பெரும் புலவர் நயம்பட எடுத்துக் கூறி வழி நடத்தும் பாட்டு, எண்ணுதலுக்குரியது.

ஒரு சிறிய நிலப்பரப்பில் விளைந்த நெல்கொண்டு, யானைக்குப் பல நாள்களுக்கு உணவு வழங்கி வளர்க்கலாம். எப்பொழுது? முறையாக நெல்லை விளைவித்து முறையாக