பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எங்கே நாகரிகம்! நாள்தோறும் வளர்ந்து வரும் சிறைச் சாலைகளின் எண்ணிக்கை என்ன? பூட்டுக்கள் விற்பனைப் பெருக்கத்தின் உண்மை என்ன? சட்டத்தின் மேல் சட்டம் இயற்றிக் குவிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள் நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர். இவையெல்லாம் எதன் அடையாளம்: உலகத்தில் இன்னமும் கணிசமாக மனித குலம் வயிறார உண்ண வழியில்லை, உடலார ஒண்டிப் படுக்க ஒரு குடிசையில்லை. ஆயினும் போர் ஓய்ந்ததா? என்ன! இன்றைய மனிதன் போராட வேண்டாத இடத்தில் போராடிக் கொண்டிருக்கிறான். பட்டி தொட்டிகளில் கூடக் கட்சி சண்டை, கட்சிக் கொடிக் கம்பங்களின் சண்டைகள்! குத்து வெட்டு! கொலைச் செய்திகள்! மனிதன் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய போர்க்குணம் அதிகாரத்தைப் பற்றியதாகிவிட்டது.

வறுமையை எதிர்த்துக் கழனியில் போராட வருபவர் எத்தனை பேர்? “உற்பத்தித் திறனில் முடுக்கி விடப்பட்ட போர்க்குணம் இருக்குமானால் இன்று உலகம் பெற்றிருக்கும் செல்வத்தைப் போல பல மடங்கு செல்வம் பெருகும். ஆனால் மனிதனின் வியாபாரப் புத்தி செல்வ உற்பத்தி பெருகுமானால் விலை வீழுமே என்று அஞ்சுகிறது. மனிதனைத் திசை திருப்புகிறது. செயற்கைப் பஞ்சத்தை உருவாக்குகிறது. பொருளை உற்பத்தி செய்பவனிடம் இருக்க வேண்டிய விலை நிர்ணய உரிமையை வியாபார உலகம் பறித்துக் கொள்கிறது. ஊரெல்லாம் உண்ண உணவு கொடுத்தவன், தான் உண்ண உணவின்றிப் போராடுகின்றான். இது என்ன கொடுமை! நம்முடைய போர்க்குணம் மனிதனைப் பற்றியதாக இருக்கின்றவரை, மொழிகளை, சமயங்களை, அரசியலைப் பற்றியதாக இருக்கிறவரை மனித உலகம் வறுமையிலிருந்து மீளாது. அடிமைத் தனத்திலிருந்து மீளாது. அவர்களை நோதல், அழுதல், சாதல் ஆகிய எந்தக் கேட்டிலிருந்தும் யாராலும், இறைவனாலும்கூடக் காப்பாற்ற