பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலவுலகம் நிலைத்தற்கு அடிப்படை

73


மிக்கார், தாழ்ந்தார் என்ற வேறுபாடின்றி வெறுக்காது அன்பு காட்டிப் பழகுதல் கடவுள் தன்மை.

உயிர்க் குணமே ஓயாது தொழிற்படுவது. உயிர்ப்பு என்பது உண்ணல் உறங்கலால் மட்டும் புலப்படுவதன்று. உயிர்ப்பின் உண்மையான அடையாளம் அறிவறிந்த ஆள் வினையில் ஓயாது ஈடுபடுதல். துன்பம் அச்சத்திற்குரியது தான். ஆனால் அஞ்சுவது பேதைமை. துன்பத்திற்கு அஞ்சாமல் துன்பத்திற்குரிய காரணங்களைக் கண்டு அஞ்சுதல் அறிஞர் தொழில்.

துன்பம் சோர்வைத் தரும். சுறுசுறுப்பைக் கெடுக்கும். தாழாது உயற்றும் உயரிய முயற்சிக்கு இடையூறு செய்யும். கவலையைத் தந்து கடு நரகத்தில் ஆழ்த்தும்; அழச் செய்து அழிக்கும், இவை கடவுள் தன்மைக்கு மாறானவை. கோழைகளும், அடிமைகளும், சோம்பேறிகளும், அஞ்சி அழுபவர்களும் ஆண்டவன் சந்நிதியைக் கெடுக்கும் பாவிகள்! இவர்கள் சைத்தானின் பூசாரிகள்; பாதுகாவலர்கள். “அஞ்ச வருவது யாதொன்றுமில்லை. அஞ்சுவதும் இல்லை” என்று அஞ்சாமல் அயராமல் ஆள்வினையில் ஆர்வலராகி ஓயாது முயற்சியில் ஈடுபடும் பண்பே கடவுள் தன்மை!

பிறரிடத்து அச்சத்தைத் தோற்றுவிக்கும் வாழ்க்கை நன்றன்று. கொடிய விலங்குகளைக் கண்டே உயிர் வர்க்கம் அஞ்சலாம். அஃது இயற்கை. ஆனால் அந்தக் கொடிய விலங்குகளைக் கூடப் பிடித்துப் பழக்கப்படுத்தினால் அவை அச்சம் தருவதில்லை. மாறாக மகிழ்ச்சியும் தருகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனித உலகம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பகுத்தறிவைப் பெற்றிருந்தும், வேதங்கள் பலவற்றைப் பெற்று ஓதியிருந்தும், நிலவுலகத்தின் பரப்பில் குறிப்பிடத்தக்க அதிக அளவு பரப்பைக் கோயில்களுக்கு என்ன பக்குவப்பட்டிருக்கிறது? மனிதன்