பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகுத்துத் தந்தருளினன். தன்னை நோக்கிக் கவலைப்படுதல் ஆண்மையை அழிக்கும்; வாழ்க்கையை நரகமாக்கும். தம்மைச் சார்ந்தாரை நோக்கிக் கவலைப்படுதல் அறிவைத் தூண்டி வளர்க்கும். ஆற்றலைப் பெருக்கும்; ஆள்வினையை வளர்க்கும்; வாழ்க்கையைச் சொர்க்கமாக்கும். வாழ்க்கையில் இந்த நுண்ணிய கலைத்திறன் இன்று நம்மில் பலருக்கு இல்லை. இன்று அவரவர்கள் அவரவர்களுக்காகவே கவலைப்படுகிறார்கள்; அழுது சாகிறார்கள். இணைந்தும் பிணைந்தும் வாழும் வாழ்க்கையில் குற்றங்களே இல்லை. அஃது எப்படி? குற்றங்களே இல்லாத வாழ்க்கையா இருக்க முடியும்? குற்றங்கள் உண்டு. குற்றங்கள் இல்லாத மானிட வாழ்க்கை இல்லை. ஆனால், இணைப்பிலும் பிணைப்பிலும் ஏற்பட்டுள்ள அன்பின் பெருக்கம் குற்றங்களைக் காண முடியாமல் மறைத்து விடுகிறது. குணங்களே தெரிகின்றன. இந்த ‘ரசவாதம்’ நடவாது போனால், அன்பு பூரணத்துவம் அடையவில்லையென்பது பொருள். இணைப்பும் பிணைப்பும் நிறை நலமுடையதாக வளரவில்லை என்பதே கருத்து.

சிறந்த தலைமகனாவதற்குரிய இலக்கணங்களைக் குறமகள் இளவெயினி எடுத்துக் கூறுகின்றார். அதில் தலையாய பண்பு, தனக்குச் சிறந்தோர் - தன்னிடத்தில் நட்புக்கிழமை கொண்டோர் தனக்குப் பிழைகள் செய்தாலும், தானறியச் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். குறமகள் இளவெயினி மிகச் சதுரப்பாட்டுடன் இந்தப் பாடலை அருளிச் செய்துள்ளார்.

‘தமர்’ என்பதற்குத் ‘தம்மில்’ பிரிவில்லாதவர் என்பது பொருள். எண்ணம், உணர்வு, உறவு, உடைமை, இன்ப துன்பந் துய்ப்பு வாழ்க்கையின் நோக்கம் ஆகிய அனைத் திலும், வேறெனக் கருதாது ஒன்றுபட்டு உழல்வோர் தமராவர். இன்றைய சமுதாய அமைப்பில் இத்தகைய