பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘ஒறுத்தற்க’ என்கிறார். ஆனால், கடமை தொடர்பான பிழைகளைக் காண்க. ஏன்? தண்டனை வழங்கவா? இல்லை! திருத்தி வளர்க்கவே.

நல்குரவு, வறுமை, மிடிமை ஆகியன தரித்திரத்தின் படி முறைகளைக் காட்டும் சொற்கள். ஒரு பொருட் சொற்கள் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அது சிறப்பன்று. மீண்டும் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதை நினைவு கூர்க, வாடிய பயிர், பயிரை வளர்ப்பவனின் பொறுப்பின்மையை - திறமையின்மையைப் பறை சாற்றும். கிராமத்தின் ஏரிகளுக்குத் தண்ணீரை அள்ளி வந்து சேர்க்கும் வாரிகள் தூர்ந்திருப்பது அங்கு வாழும் மனிதர்க்குக் கேவலத்தைக் கொடுக்கும். குச்சி போன்ற உடம்பு, பரட்டைத் தலை, சளி சிந்தும் மூக்கு, களையற்ற முகம் - குழந்தையின் இந்த அவல நிலை அக்குழந்தையின் தாயினுடைய மானத்தை வாங்குவனவாம். கோப்பில் தாள்கள் பல்கிப் பெருகி வளர்ந்து விட்டன. கோப்பில் உள்ள தாள்கள் அழுக்கேறி ஒளி மங்கிவிட்டன. கோப்பில் உள்ள தாள்களின் ஓரங்கள் மடங்கிக் கிழிந்துவிட்டன. கோப்பின் இந்தக் காட்சி, கோப்புக்குரிய எழுத்தரின் மானத்தை வாங்குவதாகும். கோயிலில் இங்கு மங்கும் குப்பைகள்; ஒட்டடைத் தோரணங்கள்; மண்ணில் வளர வேண்டிய செடிகள் மதில்களில் வளர்கின்றன. இவை அந்தத் திருக்கோயிலின் நிர்வாகி மானத்தை வாங்குவன. கருவறையில் நாற்றம். மூர்த்தியின் மீது கசடேறிய எண்ணெயின் மெழுக்கு - பாலாடை திருவருட் பொலிவு இல்லை. இஃது அந்தத் திருமேனி அருச்சகரின் மானத்தை வாங்குவது. இவை போலப் பழங்காலத்தில் நம்முடைய முன்னோர், மற்றவர்களுடைய வறுமைக்கு நாணினர். இன்று நம்மில் சிலர் கருதுவதைப்போல அவரவர்கள் வறுமைக்கு அவரவர்களே காரணம் என்றும் அல்லது அவரவர்களுடைய தலைவிதி காரணமென்றும் கருதியதில்லை. மற்றவர்களுடைய