பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




8


துணையின் இலக்கணம்


மனித சமுதாயம் ஒரு சந்தை, சந்தையில் பலர் வாழ்கின்றனர் - வாழ்வார்கள். இந்த மானிடச்சந்தையில் வாழ்வோர் தமக்குள் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்றல் இயற்கையின் நியதி - தவிர்க்க முடியாதது. துணை - உதவி மனித உலகத்தைக் கட்டிக் காப்பாற்றும் பேரறமாகும். துணை நிற்றல் ஒரு தூய பண்பு; அறப்பண்பு; இனிமை தழுவிய பண்பு. உதவி செய்தல் என்ற விழுமிய அறத்திற்கு இணையாக வேறு எந்த ஓர் அறத்தையும் எடுத்துக் கூற முடியாது. ஈதலினும் உதவுதல் உயர்ந்த பண்பு. உதவுதல், உதவி பெறுவோரை வளர்த்து வாழ்விக்கும் பண்பாகும். துணை - உதவி எப்பொழுதும் பேரறமாகி விடாது. இன்றைய உலகியல் வழக்கில் நிகழும் துணை - உதவி ஆகியவற்றில் அறத்தின் சுவட்டையே காணோம். காரணம், இன்று துணை நிற்றல் வணிக அடிப்படையிலேயே நிகழ்கின்றது. இவருக்கு இந்த வகையில் துணை நின்றால் அவர் நமக்கு எந்த வகையில் துணையாயிருக்கக்கூடும் என்ற ஆராய்ச்சியில்லாமல் யாரும் யாருக்கும் துணை நிற்க முன் வருவதில்லை. அது மட்டுமா? வலியோர் வலியோருக்கே துணை போகின்றனர். இதில் என்ன பயன்? இயற்கையின்